Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கர்நாடகா அணியோட ரன் மெஷின்... அடிச்சு தூள் கிளப்பும் வீரர்.. அதிரடி 737 ரன்கள் குவிப்பு!

டெல்லி : விஜய் ஹசாரே கோப்பை 2021 தொடர் தற்போது அரையிறுதி கட்டத்தில் உள்ளது. இன்றைய போட்டியில் கர்நாடகா மற்றும் மும்பை அணிகள் மோதி வருகின்றன.

இன்றைய போட்டியில் மும்பை அணியின் கேப்டன் பிரித்வி ஷா சிறப்பான பேட்டிங்கை அளித்து 164 ரன்களை குவித்துள்ளார்.

இதேபோல கர்நாடகாவின் ரன் மெஷின் தேவ்தத் படிக்கல்லும் இன்றைய போட்டியின் மூலம் இந்த தொடரில் 737 ரன்களை குவித்துள்ளார்.

அரையிறுதி போட்டி

அரையிறுதி போட்டி

விஜய் ஹசாரே கோப்பை தொடர் துவங்கி தற்போது அரையிறுதி கட்டத்தை நெருங்கியுள்ளது. இன்றைய அரையிறுதிப் போட்டியில் தொடரின் வலிமையான மும்பை மற்றும் கர்நாடக அணிகள் மோதிவருகின்றன. போட்டியில் டாஸ் வென்ற கர்நாடக அணி பீல்டிங்கை தேர்வு செய்தது.

323 ரன்கள் இலக்கு

323 ரன்கள் இலக்கு

இதையடுத்து ஆடிய மும்பை அணி 323 ரன்களை கர்நாடகாவிற்கு இலக்காக கொடுத்துள்ளது. அணியின் கேப்டன் பிரித்வி ஷா அதிரடியகா 165 ரன்களை குவித்துள்ளார். மேலும் அவர் இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 754 ரன்களை அடித்து இந்த தொடரில் அதிக ரன் குவித்துள்ள வீரர் என்ற பெருமையை பெற்றுள்ளார்.

படிக்கல் சூப்பர் ஆட்டம்

படிக்கல் சூப்பர் ஆட்டம்

இந்நிலையில் அடுத்ததாக கர்நாடக அணி ஆடிவரும் நிலையில், அந்த அணியின் ரன் மெஷின் தேவ்தத் படிக்கல், இன்றைய போட்டியில் 64 பந்துகளில் 64 ரன்களை எடுத்துள்ளார். இதன்மூலம் இந்த தொடரில் இதுவரை விளையாடியுள்ள 7 போட்டிகளில் 737 ரன்களை எடுத்துள்ளார்.

3 அரைசதங்கள்

3 அரைசதங்கள்

இவரும் பிரித்வி ஷாவை போலவே 7 போட்டிகளில் விளையாடி 4 சதங்களை குவித்துள்ளார். மேலும் 3 அரைசதங்களையும் அடித்துள்ளார். கடந்த 2019 விஜய் ஹசாரே தொடரில் 609 ரன்களை குவித்த தேவ்தத், எந்த நெருக்கடி சூழலையும் சிறப்பாக கையாண்டு ரன்களை குவிப்பதில் சிறந்தவதாக உள்ளார்.

Story first published: Thursday, March 11, 2021, 16:54 [IST]
Other articles published on Mar 11, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+