Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கருண் நாயருக்கு அல்வா கொடுக்கும் தேர்வாளர்கள்.. கோலி, சாஸ்திரி பதில் சொல்வார்களா?

மும்பை : கிரிக்கெட் வீரர் கருண் நாயர் இந்திய டெஸ்ட் அணியில் இடம் பெறாதது விமர்சனத்தை கிளப்பியுள்ளது.

இங்கிலாந்து டெஸ்டில் உத்தேச அணியில் இடம் பிடித்தும், களம் இறங்கும் வாய்ப்பு அவருக்கு கிடைக்கவில்லை. தொடர்ந்து தற்போது அவருக்கு வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் வாய்ப்பு கிடைக்கவில்லை.

எனினும், பல புதிய வீரர்களுக்கு வாய்ப்பு அளிக்கப்பட்டுள்ளது. ஹனுமா விஹாரி, ப்ரித்வி ஷா உள்ளிட்ட இளம் வீரர்களுக்கு மறுவாய்ப்பு கொடுக்கப்பட்டுள்ள நிலையில், கருண் நாயருக்கு இடம் மறுக்கப்பட்டுள்ளது.

முச்சதம் அடித்தவர்

முச்சதம் அடித்தவர்

இந்திய கிரிக்கெட்டில் முச்சதம் அடித்த இருவரில் ஒருவர் கருண் நாயர். மற்றொருவர் சேவாக். ஆனால், கருண் நாயர் அடுத்து காயம் மற்றும் ஒரு சில தொடர்களில் பார்ம் அவுட் ஆனது என்பது போன்ற காரணங்களால் இந்திய டெஸ்ட் அணியில் இடம் கிடைக்கவில்லை. மீண்டும், தன் திறமையை உள்ளூர் கிரிக்கெட்டில் நிரூபித்து இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இடம் பிடித்தார். எனினும், ஆடும் பதினோரு வீரர்களில் ஒருவராக அவருக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை.

விளக்கம் எங்கே?

விளக்கம் எங்கே?

அதே இங்கிலாந்து தொடரில் உத்தேச அணியில் இடம் பிடித்து களத்தில் ஆடாத ப்ரித்வி ஷாவுக்கு மறுவாய்ப்பு கிடைத்துள்ளது. ஆனால், கருண் நாயர் புறக்கணிக்கப்பட்டுள்ளார். இதற்கு தேர்வாளர்கள் தரப்பில் எந்த விளக்கமும் இல்லாதது மேலும் எதிர்ப்புகளை கூட்டியுள்ளது.

வெங்க்சர்க்கார் கேள்விகள்

வெங்க்சர்க்கார் கேள்விகள்

முன்னாள் வீரர் திலிப் வெங்க்சர்க்கார் கூறுகையில், "கருணுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட விதம் மிகவும் அதிர்ச்சியாக உள்ளது. இங்கிலாந்து அணிக்கு எதிராக அவர் முச்சதம் அடித்து நீண்ட நாட்கள் ஆகி விடவில்லை. கருணுக்கு இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் வாய்ப்பளிக்காமல், நடுவே வந்த விஹாரிக்கு வாய்ப்பு அளித்தது அர்த்தமில்லாதது மட்டுமின்றி மோசமானது" என கூறினார்.

பதில் எங்கே?

பதில் எங்கே?

கருண் நாயர் அணியில் இடம் பெறாதது பற்றி தேர்வாளர்கள், கேப்டன் கோலி, பயிற்சியாளர் ரவி சாஸ்திரி ஆகியோர் நிச்சயம் பதில் சொல்லியே ஆக வேண்டும். அதே போல, ரோஹித் சர்மாவுக்கு ஏன் டெஸ்ட் வாய்ப்பு மறுக்கப்படுகிறது என்பதையும், பார்மில் இல்லை என அணியில் இருந்து நீக்கப்பட்ட முரளி விஜய் இங்கிலாந்து கவுன்டியில் நான்கு 50+ ரன்கள் அடித்தும் அணிக்கு ஏன் தேர்வு செய்யப்படவில்லை என்பதையும் கூற வேண்டும்.

Story first published: Monday, October 1, 2018, 16:11 [IST]
Other articles published on Oct 1, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+