
பேட்டி தான் காரணம்
அவரது இந்த பரிதாப நிலைக்கு காரணம் அவர் அளித்த பேட்டி ஒன்று தான் எனக் கூறப்படுகிறது. எப்படி இருந்தாலும், இந்திய கிரிக்கெட் வரலாற்றில் இவரது நிலை மிக பரிதாபமானது தான். வேறு எந்த வீரருக்கும் இவரைப் போன்ற நிலை ஏற்பட்டு இருக்காது. அப்படி என்னதான் நடந்தது?

இங்கிலாந்து தொடரில் அறிமுகம்
இந்தியாவில் நடைபெற்ற இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் அறிமுகம் ஆனார் கருண் நாயர். தன் மூன்றாவது டெஸ்ட் போட்டியில் சென்னை மண்ணில் ட்ரிபுள் செஞ்சுரி அடித்தார் கருண் நாயர்.

ஹீரோவாக மாறினார்
அந்த ஒரே இன்னிங்க்ஸில் ஹீரோவாக மாறினார் கருண் நாயர். அவர் மீது பெரும் எதிர்பார்ப்பு எழுந்தது. அடுத்து ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றார்.

அரைசதம் அடிக்கவில்லை
தன் ட்ரிபுள் செஞ்சுரிக்கு பின் நான்கு இன்னிங்க்ஸ் மட்டுமே ஆடும் வாய்ப்பை பெற்றார் கருண் நாயர். ஆஸ்திரேலிய டெஸ்ட் தொடரில் ஆடிய நான்கு இன்னிங்க்ஸ்களிலும் அவரால் ஒரு அரைசதம் கூட அடிக்க முடியவில்லை.

ரஞ்சி தொடரில் சொதப்பல்
அடுத்து வந்த ரஞ்சி தொடரில் அவர் சரியாக ரன் குவிக்கவில்லை. அத்துடன் அவரது வாய்ப்புக்கு தடை போட்டது தேர்வுக் குழு. பின் இந்தியா ஏ அணியில் தொடர்ந்து இடம் பெற்று வந்த அவர், இடையே 2018 இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் இந்திய அணியில் இடம் பெற்றார்.

களமிறங்கும் வாய்ப்பு இல்லை
ஆனால், இங்கிலாந்து டெஸ்ட் தொடரில் நடந்த ஐந்து போட்டிகளில் ஒரு போட்டியில் கூட களமிறங்கும் வாய்ப்பை பெறவில்லை. இத்தனைக்கும் அந்தப் போட்டியில் இந்திய அணியின் பேட்டிங் படு மோசமாக இருந்தது.

கேள்வி எழுப்பினர்
அப்போது கருண் நாயருக்கு ஏன் இந்திய அணியில் இடம் அளிக்கப்படவில்லை என கவாஸ்கர் போன்ற பல முன்னாள் வீரர்கள் கேள்வி எழுப்பினர். அதற்கு, தேர்வுக் குழுவோ, இந்திய அணி நிர்வாகமோ சரியான பதில் அளிக்கவில்லை.

அதிர்ச்சி
மாறாக அடுத்து நடந்த டெஸ்ட் தொடரில் கருண் நாயருக்கு அணியில் வாய்ப்பு அளிக்கப்படவில்லை. அது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. அப்போது கருண் நாயரிடம் ஊடகங்கள் அணியில் தேர்வு செய்யப்படாதது குறித்து தேர்வுக் குழு உங்களிடம் பேசியதா? என கேள்வி எழுப்பினர்.

யாரும் பேசவில்லை
அதற்கு பதில் அளித்த கருண், "தான் யாரையும் அணுகி எதுவும் கேட்கவில்லை. யாரும் தன்னிடம் பேசவில்லை" என்றார். ஆனால், தேர்வுக் குழு தாங்கள் அவரிடம் விளக்கம் அளித்துவிட்டதாகக் கூறியதால் சர்ச்சை எழுந்தது.

விதிமீறல் பேட்டி
கருண் நாயர் பிசிசிஐ ஒப்பந்தத்தை மீறி ஊடகத்திற்கு பேட்டி அளித்ததாகவும் கூறப்பட்டது. அதன் பின் அவருக்கு இந்திய அணியில் வாய்ப்பு கிடைக்கவில்லை. இந்த நிலையில் அவர் தற்சமயம், ரஞ்சி தொடரில் ஆடி வருகிறார்.

எதிர்பார்க்கவில்லை
தற்போது அவரிடம் இந்திய அணியில் மீண்டும் வாய்ப்பு பெறுவதை எதிர்பார்க்கிறீர்களா என கேட்ட போது, "உண்மையில் இல்லை, ஏனெனில், இங்கு என்ன நடக்கிறது என்பதில் முதலில் கவனம் செலுத்துவதே முக்கியம், என்ன நடக்க வேண்டும் என்பதை என்னால் கட்டுப்படுத்த முடியாது. எனது ஒரே கவனம் கர்நாடகாவுக்கு சிறப்பாகச் செயல்பட்டு பங்களிப்பது மட்டுமே" என்றார்.


Click it and Unblock the Notifications