ஒரே வார்த்தையால் மாறிய வாழ்க்கை..!! காஷ்மீர் வீரர் வாழ்க்கையில் ஒளி ஏற்றி வைத்த தோனி
காஷ்மீர்: அரசியல், எல்லை பிரச்சினை, பிரிவினைவாதம் ஆகியவற்றால் பாதிக்கப்பட்ட காஷ்மீர்இளைஞர்கள், தற்போது மெல்ல மெல்ல வாழ்க்கையில் ஜெய்த்து வருகின்றனர்.
வாழ்க்கையில் எவ்வளவு கீழ் நிலையில் இருந்தாலும், அவர்களை விளையாட்டு வாழ்க்கையின் உச்சத்துக்கு கொண்டு செல்லும்.
அப்படி தான் தற்போது காஷ்மீர் இளைஞர்கள் கிரிக்கெட் மூலம் மெல் மெல்ல கருப்பு நாட்களிலிருந்து மீண்டு வருகின்றனர்.

காஷ்மீர் வீரர்கள்
ஐபிஎல் மூலம் புதிய வாழ்க்கையை பெற்றவர்கள் அப்துல் சமத், உம்ரான் மாலிக் போன்ற வீரர்கள். இதில் அப்துல் சமத் அதிரடியாக விளையாடக் கூடியவர். தற்போது ஐதாபாத் அணி அவரது திறமை மேல் அவ்வளவு நம்பிக்கை வைத்து அவரை ஏலத்தில் விடாமல் தக்க வைத்தது.

தோனியுடன் சந்திப்பு
இந்த நிலையில், காஷ்மீரில் திறமையான வீரர்களை கண்டறிந்தது இர்பான் பதான் தான் என்றாலும், அப்துல் சமத்தின் வாழ்க்கை மாறியது தோனி கொடுத்த ஒரு அட்வைசால் தான். ஐபிஎல் போட்டி முடிந்த பிறகு தோனியை சென்று சந்திதேன். அவர் பழகுவதற்கு இனிமையானவர். தலைக்னம் இல்லாத மனிதர்.

தோனியின் அறிவுரை
என்னை பார்த்ததும் பேசிய தோனி, எல்லாருக்கும் உன்னை போல் சிக்சர் அடிக்கும் திறமை இருக்காது. உனக்கு அந்த திறமை உள்ளது. விடாமல் கடுமையாக முயற்சி செய், நிச்சயம் பலன் கிடைக்கும் என்று எனக்கு அறிவுரை கூறினார்.வாழ்க்கையாக இருந்தாலும் சரி, கிரிக்கெட்டாக இருந்தாலும் சரி, தோனி அண்ணாவிடமிருந்து நீங்கள் நிறைய கற்று கொள்ளலாம் என்று அப்துல் சமாத் கூறினார்.

அதிரடி சதம்
தற்போது காஷ்மீரின் கோடீஸ்வரர் வீரரான அப்துல் சமத், ரஞ்சி கோப்பையில் விளையாடி வருகிறார். புதுச்சேரிக்கு எதிரான ஆட்டத்தில் அப்துல் சமத் 78 பந்துகளில் 103 ரன்கள் எடுத்துள்ளார். தற்போது ஐபிஎல் சீசனில் சிறப்பாக விளையாடி, இந்திய அணியில் இடம் பிடிப்பதே அப்துல் சமத்தின் அடுத்த இலக்காக உள்ளது.


Click it and Unblock the Notifications