Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

நிரூபிக்க வாய்ப்பு தரல.. ஆனால் நீக்கம்.. ஜகதீசனை விடுவித்தது ஏன்?.. சிஎஸ்கே நிர்வாகம் விளக்கம்!

சென்னை: தமிழக வீரர் நாராயண் ஜகதீசனை ஏன் கடைசி வரை புறகணித்தே வருகிறீர்கள் என்பதற்கு சிஎஸ்கே நிர்வாகம் பதிலளித்துள்ளது.

2023ம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான வீரர்கள் ஏலம் வரும் டிசம்பர் 23ம் தேதியன்று நடைபெறவுள்ளது. மினி ஏலமான இது கேரள மாநிலம் கொச்சியில் நடைபெறும் என பிசிசிஐ அறிவித்துள்ளது.

இந்த ஏலத்திற்காக அனைத்து அணிகளும் தாங்கள் தக்கவைக்கும் வீரர்கள் பட்டியலை வெளியிட்டது. இதில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சில அதிரடி முடிவுகளை எடுத்துள்ளது.

ரசிகர்கள் அதிருப்தி

ரசிகர்கள் அதிருப்தி

அதாவது அந்த அணியின் நட்சத்திர வீரர்களான டுவைன் பிராவோ, கிறிஸ் ஜோர்டன் போன்ற வீரர்களை அதிரடியாக விடுவித்தது. இவர்களை கூட ஃபிட்னஸ், அதிக வயது என ரசிகர்கள் ஏற்றுக்கொண்டனர். ஆனால் தமிழகத்தை சேர்ந்த இளம் வீரர் நாராயண் ஜகதீசனை ஏன் நீக்கினார்கள் என்பதே புரியாமல் ரசிகர்கள் கோபத்தில் உள்ளனர்.

வாய்ப்பே தரல

வாய்ப்பே தரல

வலதுகை ஓப்பனிங் பேட்ஸ்மேனான ஜகதீசனை கடந்தாண்டு ரூ.20 லட்சத்திற்கு சிஎஸ்கே வாங்கியது. பல போட்டிகளில் வெளியில் மட்டுமே உட்காரவைக்கப்பட்ட அவர், வெறும் 2 போட்டிகளில் தான் வாய்ப்பு பெற்றார். அதிலும் ஒரு போட்டியில் 39 ரன்கள் எடுத்து அவுட்டாகாமல் இருந்தார். இவருக்கு தொடர்ந்து வாய்ப்பு கொடுத்தால் நல்ல எதிர்காலம் இருக்கும் என நினைத்த சூழலில் வெளியேற்றப்பட்டுள்ளார்.

சிஎஸ்கே தந்த விளக்கம்

சிஎஸ்கே தந்த விளக்கம்

இந்நிலையில் இதுகுறித்து காசி விஸ்வநாதன் விளக்கம் அளித்துள்ளார். அதில், ஓப்பனிங் பேட்ஸ்மேன்களுக்கு ப்ளேயிங் 11ல் வாய்ப்பு கிடைப்பது கடினம். எங்கள் அணியில் ஏற்கனவே நன்கு செட்டிலான ஓப்பனிங் வீரர்கள் உள்ளனர். மற்றவர்கள் அணியில் இருந்து வாய்ப்பு பெறாமல் இருப்பது நல்லதல்ல. எனவே கழட்டிவிட்டோம். அவருக்கு வேறு ஏதாவது அணியில் விளையாட நல்ல வாய்ப்பு கிடைக்கலாம்.

ஏலத்திற்கான திட்டம்

ஏலத்திற்கான திட்டம்

இதுபோன்ற முடிவுகளை எடுத்ததால் தான் சிஎஸ்கேவிடம் தற்போது ரூ.20.45 கோடி உள்ளது. இதனை வைத்து அணிக்கு தேவையான வீரர்களை மினி ஏலத்தின் போது வாங்கலாம். மற்ற அணிகளிடமும் நிறைய தொகை இருப்பதால்தான் அதிக பணத்துடன் செல்ல முடிவெடுத்தோம் என காசி விஸ்வநாதன் கூறினார்.

Story first published: Wednesday, November 16, 2022, 17:10 [IST]
Other articles published on Nov 16, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+