For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

86.25 கோடிக்கு வேட்டு.. அதிர்ச்சியில் காவ்யா மாறன்.. சன்ரைசர்ஸ் ஹைதராபாத் நிலைமை இதுதான்!

ஹைதராபாத்: மொத்தம் 86.25 கோடி ரூபாயை 6 வீரர்களுக்காக மட்டும் செலவிட்ட சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் உரிமையாளர் காவ்யா மாறன் தற்போது நொந்து போயிருக்கிறார். அந்த அளவுக்கு சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி மற்ற அணிகளை விட படு மோசமான செயல்பாட்டை அளித்திருக்கிறது.

இதுவரை விளையாடிய ஐந்து போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்று நான்கு போட்டிகளில் படுதோல்வி அடைந்திருக்கிறது சன்ரைசர்ஸ் ஹைதராபாத். அந்த நான்கு தோல்விகளிலும் போட்டி கடைசி ஓவர் வரை கூட செல்லவில்லை. நான்கு போட்டிகளிலும் 17வது ஓவரிலேயே போட்டி முடிவுக்கு வந்தது தான் இதில் மேலும் மோசமான செயல்பாடாக அமைந்துள்ளது.

2025 ஐபிஎல் மெகா ஏலத்திற்கு முன்னதாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதிரடியாக 5 வீரர்களை தக்க வைத்தது. அவர்களுக்காக 75 கோடி ரூபாயை சம்பளமாக அளித்தார் அந்த அணியின் உரிமையாளர் காவ்யா மாறன். அது அப்போது பலருக்கும் வியப்பை ஏற்படுத்தியது.

Kavya Maran s Disappointment as Sunrisers Hyderabad Struggle Despite Big Spending

சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டனாக பாட் கம்மின்ஸ் ஒப்பந்தம் செய்யப்பட்டார். அவருக்கு 18 கோடி ரூபாய் அளிக்கப்பட்டது. அதிரடி பேட்ஸ்மேன் ஹென்ரிச் கிளாசனுக்கு 23 கோடி ரூபாய் சம்பளமாக அளிக்கப்பட்டது. டிராவிஸ் ஹெட் மற்றும் அபிஷேக் ஷர்மாவுக்கு தலா 14 கோடி ரூபாய் அளிக்கப்பட்டது. நிதிஷ் குமார் ரெட்டியையும் தக்கவைத்த அந்த அணி அவருக்கு 6 கோடி ரூபாய் அளித்தது. இந்த ஐந்து வீரர்களுக்கு மட்டுமே 75 கோடி செலவிட்டது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

அடுத்து ஐபிஎல் ஏலத்தில் இஷான் கிஷனை சுமார் 11.25 கோடி ரூபாய்க்கு வாங்கினார் காவ்யா மாறன். இந்த ஆறு வீரர்கள் மட்டுமே சன்ரைசர்ஸ் அணியை பேட்டிங்கில் உச்சத்துக்கு கொண்டு செல்வார்கள், ஒவ்வொரு போட்டியிலும் 200 முதல் 300 ரன்கள் வரை குவிப்பார்கள், கேப்டனாக கம்மின்ஸ் அணியை சிறப்பாக வழி நடத்துவார் என்ற எதிர்பார்ப்பு இருந்தது.

ஆனால், இதுவரை நடந்த ஐந்து போட்டிகளில் இரண்டு முறை மட்டுமே இந்த அணி 200 ரன்களை எட்டி இருக்கிறது. முதல் போட்டியில் 286 ரன்கள் அடித்து மிரள வைத்த சன்ரைசர்ஸ் அணி அந்த போட்டியில் வெற்றி பெற்றது. ஆனால், அதன் பிறகு நடந்த போட்டிகளில் மூன்று முறை முதலில் பேட்டிங் செய்து பின்னர் எதிரணியை 17வது ஓவரிலேயே வெற்றி பெற விட்டது. ஒரு போட்டியில் சேஸிங் செய்த சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி அதே 17வது ஓவரில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து படுதோல்வி அடைந்தது.

தற்போது ஐந்து போட்டிகளில் விளையாடி ஒரு வெற்றியை மட்டும் பெற்று புள்ளி பட்டியலில் கடைசி இடத்தில் இருக்கிறது. வெறும் ஆறு வீரர்களுக்கு மட்டும் 86.25 கோடியை செலவிட்ட காவ்யா மாறன் தனது அணியின் செயல்பாட்டால் அதிர்ச்சியில் இருக்கிறார். நேற்றைய போட்டியில் குஜராத் டைட்டன்ஸ் அணிக்கு எதிராக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மீண்டும் சொதப்பியபோது அவர் தனது உணர்ச்சிகளை அடக்க முடியாமல் கோபத்தையும், அதிருப்தியையும் வெளிப்படுத்திய வண்ணம் இருந்தார்.

காவ்யா மாறனின் முடிவு சரியா தவறா என சமூக வலைதளங்களில் ரசிகர்கள் விவாதித்து வருகின்றனர். இதில் மிகவும் மோசமாக செயல்பட்டு இருப்பது அபிஷேக் சர்மா தான். அவர் ஐந்து போட்டிகளில் 51 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார்.

அவரை விட பவுலரான பாட் கம்மின்ஸ் அதிக ரன்கள் சேர்த்திருக்கிறார். அவர் ஐந்து போட்டிகளில் 56 ரன்கள் எடுத்து இருக்கிறார். அபிஷேக் ஷர்மாவை விட அதிக ஸ்ட்ரைக் ரேட்டில் ரன் சேர்த்து இருக்கிறார் கம்மின்ஸ். அந்த வகையில் 14 கோடி ரூபாயை சம்பளமாக பெற்று இருக்கும் அபிஷேக் ஷர்மா மிக மோசமான செயல்பாட்டை வெளிப்படுத்தி இருக்கிறார் என்று கூறலாம்.

கிளாசன் 5 போட்டிகளில் 152 ரன்கள் எடுத்திருந்தாலும் அதிகபட்சமாக ஒரு போட்டியில் 34 ரன்கள் மட்டுமே எடுத்து இருக்கிறார். இதன் மூலம் அவர் சராசரியாக ஒவ்வொரு போட்டிக்கும் 30 ரன்கள் மட்டுமே எடுத்திருக்கிறார் என்று தெரிகிறது. அவரால் எந்த ஒரு போட்டியிலும் தனியாக அணியின் வெற்றிக்கு உதவ முடியாத நிலையே உள்ளது.

முதல் போட்டியில் கூட இஷான் கிஷன் எடுத்த 106 ரன்கள் தான் அந்த அணியின் வெற்றிக்கு காரணமாக இருந்தது. அந்த போட்டிக்குப் பிறகு இஷான் கிஷன் 4 போட்டிகளில் 21 ரன்கள் மட்டுமே சேர்த்திருக்கிறார். சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்களின் பேட்டிங் மற்றும் பவுலிங் செயல்பாடுகளை இங்கே பார்க்கலாம்.

2025 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்களின் பேட்டிங் செயல்பாடு -

ஹென்ரிச் கிளாசன் - 5 போட்டிகள் - 5 இன்னிங்ஸ் - 152 ரன்கள் - 168.89 ஸ்ட்ரைக் ரேட்

டிராவிஸ் ஹெட் - 5 போட்டிகள் - 5 இன்னிங்ஸ் - 148 ரன்கள் - 189.74 ஸ்ட்ரைக் ரேட்

அனிகேத் வர்மா - 5 போட்டிகள் - 5 இன்னிங்ஸ் - 141 ரன்கள் - 183.12 ஸ்ட்ரைக் ரேட்

இஷான் கிஷன் - 5 போட்டிகள் - 5 இன்னிங்ஸ் - 127 ரன்கள் - 176.39 ஸ்ட்ரைக் ரேட்

நிதிஷ் குமார் ரெட்டி - 5 போட்டிகள் - 5 இன்னிங்ஸ் - 112 ரன்கள் - 119.15 ஸ்ட்ரைக் ரேட்

பாட் கம்மின்ஸ் - 5 போட்டிகள் - 5 இன்னிங்ஸ் - 56 ரன்கள் - 155.56 ஸ்ட்ரைக் ரேட்

அபிஷேக் ஷர்மா - 5 போட்டிகள் - 5 இன்னிங்ஸ் - 51 ரன்கள் - 127.50 ஸ்ட்ரைக் ரேட்

கமிந்து மெண்டிஸ் - 2 போட்டிகள் - 2 இன்னிங்க்ஸ் - 28 ரன்கள் - 112.00 ஸ்ட்ரைக் ரேட்

ஹர்ஷல் படேல் - 4 போட்டிகள் - 3 இன்னிங்க்ஸ் - 20 ரன்கள் - 80.00 ஸ்ட்ரைக் ரேட்

முகமது ஷமி - 5 போட்டிகள் - 4 இன்னிங்க்ஸ் - 10 ரன்கள் - 100.00 ஸ்ட்ரைக் ரேட்

வில்லெம் முல்டர் - 1 போட்டி - 1 இன்னிங்க்ஸ் - 9 ரன்கள் - 81.82 ஸ்ட்ரைக் ரேட்

அபினவ் மனோகர் - 3 போட்டிகள் - 3 இன்னிங்க்ஸ் - 6 ரன்கள் - 46.15 ஸ்ட்ரைக் ரேட்

சிமர்ஜீத் சிங் - 4 போட்டிகள் - 3 இன்னிங்க்ஸ் - 3 ரன்கள் - 42.86 ஸ்ட்ரைக் ரேட்

2025 ஐபிஎல் தொடரில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி வீரர்களின் பவுலிங் செயல்பாடு -

முகமது ஷமி - 5 போட்டிகள் - 5 இன்னிங்க்ஸ் - 102 பந்துகள் - 5 விக்கெட்டுகள்

ஜீஷான் அன்சாரி - 3 போட்டிகள் - 3 இன்னிங்க்ஸ் - 66 பந்துகள் - 4 விக்கெட்டுகள்

ஹர்ஷல் படேல் - 4 போட்டிகள் - 4 இன்னிங்க்ஸ் - 78 பந்துகள் - 4 விக்கெட்டுகள்

பாட் கம்மின்ஸ் - 5 போட்டிகள் - 5 இன்னிங்க்ஸ் - 100 பந்துகள் - 4 விக்கெட்டுகள்

ஆடம் ஜம்பா - 2 போட்டிகள் - 2 இன்னிங்க்ஸ் - 48 பந்துகள் - 2 விக்கெட்டுகள்

சிமர்ஜீத் சிங் - 4 போட்டிகள் - 4 இன்னிங்க்ஸ் - 60 பந்துகள் - 2 விக்கெட்டுகள்

கமிந்து மெண்டிஸ் - 2 போட்டிகள் - 2 இன்னிங்க்ஸ் - 12 பந்துகள் - 1 விக்கெட்

Story first published: Monday, April 7, 2025, 12:38 [IST]
Other articles published on Apr 7, 2025
English summary
Kavya Maran's Disappointment as Sunrisers Hyderabad Struggle Despite Big Spending
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+