For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

ரூ.12,50,000 பரிசுத் தொகை.. வைரலாகும் அனில் கும்ப்ளே தொடர்பான கிரிக்கெட் கேள்வி.. பதில் இது தான்

மும்பை : பாலிவுட் சூப்பர் ஸ்டார் அமிதாப் பச்சன் நடத்தும் கவுன் பனேகா குரோர்பதி என்ற நிகழ்ச்சி மிகவும் பிரபலமானது இந்த நிகழ்ச்சியை பார்த்து தமிழில் உங்களில் யார் கோடீஸ்வரன் போன்ற நிகழ்ச்சியை நடிகர் சூர்யா, பிரகாஷ்ராஜ், சரத்குமார் போன்ற நடிகர்கள் தொகுத்து வழங்கியிருக்கிறார்கள்.

இந்த நிலையில் அமிதாப்பச்சன் நடத்தும் இந்த கேம் ஷோவை வைத்து ஹாலிவுட்டில் ஸ்லம்டாக் மில்லினர் என்ற படம் எல்லாம் வந்து ஆஸ்கார் விருதை தட்டிச் சென்றது. இந்த நிலையில் கவுன் பனேகா குரோர்பதி நிகழ்ச்சி இன்றும் தொலைக்காட்சிகளில் பிரபலமாக ஒளிபரப்பு செய்யப்பட்டு வருகிறது.

KBC Game show virat cricket question about anil kumble 10 wickets answer is here

இதில் நிச்சயமாக கிரிக்கெட் தொடர்பான கேள்வி ஒன்று இடம்பெறும். அந்த வகையில் நேற்றைய நிகழ்ச்சியில் 12 லட்சத்து 50 ஆயிரம் ரூபாய்க்கான கேள்வி ஒன்று தற்போது சமூக வலைத்தளத்தில் வைரல் ஆகி வருகிறது. அதில் 1999 ஆம் ஆண்டு டெல்லியில் பாகிஸ்தானுக்கு எதிராக நடைபெற்ற டெஸ்ட் போட்டியில் கும்ப்ளே ஒரே இன்னிங்சில் 10 விக்கெட்டுகளை எடுத்த போது அந்தப் போட்டியில் நடுவராக இருந்தவர் யார் என்று கேள்வி கேட்கப்பட்டது.

இதற்கு பீலோ ரிப்போர்ட்டர்,எஸ் வெங்கட்ராமன்,டேவிட் ஷெப்பர்ட் ஏவி ஜெயபிரகாஷ் என்ற நான்கு ஆப்ஷன்களும் வழங்கப்பட்டு இருக்கிறது. இந்தக் கேள்வியை ஸ்க்ரீன் ஷாட் எடுத்து கிரிக்கெட் ரசிகர்கள் அதிக அளவில் சமூக வலைத்தளத்தில் பகிர்ந்து வந்தனர். இது யார் நடுவராக இருந்தார் என்று ரசிகர்கள் சமூக வலைத்தளத்தில் கேள்வி கேட்டு வந்தனர். இதற்கு பலரும் பிரபல நடுவரான டேவிட் சஃபர்டை பதிலாக கூறினார்கள். ஆனால் இதற்கு சரியான பதில் ஏவி ஜெயபிரகாஷ் தான். ஏ வி ஜெயப்பிரகாஷ் ஒரு முன்னாள் கிரிக்கெட் வீரரும் கூட.

கர்நாடகா அணிக்காக 79 உள்ளூர் போட்டிகளில் விளையாடி 3500 ரன்கள் 77 விக்கெட்டுகளையும் எடுத்திருக்கிறார். இந்த நிலையில் 1993 ஆம் ஆண்டு ஜெயபிரகாஷ் சர்வதேச நடுவராக தனது பணியை தொடர்ந்தார். இந்த நிலையில் இன்று அமிதாப்பச்சன் நடத்திய கேம் ஷோவால் தற்போது ஜெயப்பிரகாஷ் பிரபலம் ஆனார். இது குறித்து பேசிய ஜெயப்பிரகாஷ் பல ஆண்டுகள் கழித்து தற்போது அணில் கும்ப்ளேவால் நானும் வரலாற்றில் இடம் பிடித்து விட்டேன் என்று எனக்கு தோன்றுகிறது. நான் இன்னும் அந்தப் போட்டியின் ஹைலைட்ஸ் சிடியாக வைத்திருக்கிறேன். என்னுடைய நண்பர்கள் வீட்டிற்கு வந்தால் அந்த மேட்சை தொலைக்காட்சியில் போட்டு நாங்கள் இன்னும் பார்த்து வருகிறோம் என்று கூறினார்.

Story first published: Wednesday, September 20, 2023, 22:15 [IST]
Other articles published on Sep 20, 2023
English summary
KBC Game show virat cricket question about anil kumble 10 wickets answer is here ரூ.12,50,000 பரிசுத் தொகை.. வைரலாகும் அணில் கும்ப்ளே தொடர்பான கிரிக்கெட் கேள்வி.. பதில் இது தான்
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+