Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

அழகிய ஆலப்புழாவில்... "போட்டிங்" மட்டுமல்ல இனி கிரிக்கெட் "பேட்டிங்"கையும் கண்டு களிக்கலாம்!

ஆலப்புழா: கேரளத்து ஆலப்புழாவில் அழகிய கிரிக்கெட் மைதானம் ஒன்று புதிதாய்ப் பிறந்துள்ளது. இப்போதைக்கு இது சர்வதேச தரத்திலான மைதானம் இல்லை என்றாலும் கூட, எதிர்கால்தில் அந்த அந்தஸ்துக்கு உயரும் என்று கேரள கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

இந்தியாவில் பல முக்கிய நகரங்களில் கிரிக்கெட் மைதானங்கள் உள்ளன. இந்திய கிரிக்கெட் வாரியத்தின் உதவியுடன், அந்தந்த மாநில கிரிக்கெட் சங்கம் சார்பில் கட்டப்பட்ட மைதானங்கள் இவை.

தமிழகத்து சிதம்பரம்

தமிழகத்து சிதம்பரம்

தமிழகத்தைப் பொறுத்தவரை சென்னையில் சேப்பாக்கத்தில் எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியம் உள்ளது. அடுத்து கேரளாவில் கொச்சியில் ஸ்டேடியம் உள்ளது. கர்நாடகத்தில் பெங்களூரில் சின்னச்சாமி ஸ்டேடியம் உள்ளது. ஆந்திராவைப் பொறுத்தவரை ஹைதராபாத், விசாகப்பட்டனம், விஜயவாடா என 3 நகரங்களில் உள்ளன.

கேரளத்து ஆலப்புழா

கேரளத்து ஆலப்புழா

இந்த நிலையில் கேரளாவில் மேலும் ஒரு ஸ்டேடியம் கட்டி எழுப்பப்பட்டுள்ளது. அழகிய எழில் கொஞ்சும் ஆலப்புழாவில் இந்த ஸ்டேடியம் உருவாகியுள்ளது. தற்போது இது சர்வதேச தரத்தில் இல்லை என்ற போதிலும் விரைவில் அந்த நிலைக்கு இது உயர்த்தப்படவுள்ளதாக கேரள கிரிக்கெட் சங்கம் தெரிவித்துள்ளது.

சஞ்சு சாம்சன் முன்னிலையில்

சஞ்சு சாம்சன் முன்னிலையில்

இந்த மைதானத்தை கேரள மாநில உள்துறை அமைச்சர் ரமேஷ் சென்னிதலா தொடங்கி வைத்தார். விளையாட்டு அமைச்சர் திருவாஞ்சூர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர். இந்திய கிரிக்கெட் வீரர் சஞ்சு சாம்சனும் நிகழ்ச்சியில் கலந்து கொண்டார்.

கல்லூரி கிரவுண்டை வாங்கி

கல்லூரி கிரவுண்டை வாங்கி

ஆலப்புழாவில் உள்ள எஸ்.டி. கல்லூரி மைதானத்திற்கு அருகே உள்ள கல்லூரிக்குச் சொந்தமான இடத்தை வாங்கி இந்த இடத்தில் மைதானத்தைக் கட்டியுள்ளது கேரள கிரிக்கெட் சங்கம்.

குத்தகைக்கு

குத்தகைக்கு

ரூ. 3.5 கோடி செலவில் இந்த மைதானத்தை உருவாக்கியுள்ளனர். 15 ஆண்டு காலத்திற்கு இந்த மைதானத்தை கேரள கிரிக்கெட் சங்கத்திற்கு குத்தகைக்குக் கொடுத்துள்ளது எஸ்.டி. கல்லூரி. இதற்காக ஒப்பந்தமும் கையெழுத்தாகியுள்ளது.

இடம் கல்லூரிக்குத்தான்

இடம் கல்லூரிக்குத்தான்

மைதானத்தின் உரிமை கல்லூரி நிர்வாகத்திடமே தொடர்ந்து இருக்கும். அதேசமயம், தினசரி செயல்பாடுகளை கவனிக்க கல்லூரி நிர்வாகம் மற்றும் கேரள கிரிக்கெட் சங்கம் ஆகியவை இணைந்து கமிட்டி அமைத்து அதை செயல்படுத்தவுள்ளன.

5 பிட்ச்

5 பிட்ச்

இந்த மைதானத்தில் மொத்தம் 5 பிட்ச்சுகள் போடப்பட்டுள்ளன. பெவிலியன் தவிர, வீராங்கனைகளுக்கான விளையாட்டு காம்ப்ளக்ஸ், உள்ளரங்க பயிற்சி மையம் ஆகியவையும் அமைக்கப்பட்டுள்ளன.

Story first published: Tuesday, June 9, 2015, 14:03 [IST]
Other articles published on Jun 9, 2015
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+