For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

திணேஷ் கார்த்திக்குக்கும் 'செம' கிராக்கி.. ரூ. 12 கோடிக்கு மீண்டும் டெல்லியே வாங்கியது!

பெங்களூர்: யுவராஜ் சிங்குக்கு அடுத்து மிகப் பெரிய விலைக்குப் போயுள்ளார் டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் திணேஷ் கார்த்திக். அவரை அணியிலிருந்து நீக்கிய அதே டெல்லி டேர்டெவில்ஸ் ரூ. 12 கோடிக்கு விலைக்கு எடுத்துள்ளது குறிப்பிடத்தக்கது.

டெல்லி டேர்டெவில்ஸ் அணியின் வீரேந்திர ,ஷேவாக் அடிமாட்டு ரேட்டுக்கு விலை போயுள்ள நிலையில் திணேஷ் கார்த்திக், பெரிய விலைக்கு மீண்டும் டெல்லி அணியாலேயே வாங்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

யுவராஜ் சிங்தான் இன்றைய ஏலத்தில் பெரிய தொகைக்கு, அதாவது ரூ. 14 கோடிக்கு விலை போனார். அவருக்கு அடுத்த காஸ்ட்லி வீரராக திணேஷ் கார்த்திக்
உருவெடுத்துள்ளார்.

ஆரம்பத்திலிருந்தே டெல்லிக்காக

ஆரம்பத்திலிருந்தே டெல்லிக்காக

ஆரம்பத்திலிருந்தே டெல்லிக்காக ஆடி வருபவர் திணேஷ் கார்த்திக். டோணியை சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக்கியதால் திணேஷை, சென்னை அணி நிராகரித்து விட்டது.

டெல்லிக்காக கலக்கியவர்

டெல்லிக்காக கலக்கியவர்

சொந்த மண்ணின் சொந்த அணியால் நிராகரிக்கப்பட்டாலும் கூட டெல்லி அணிக்காக கலக்கலாக ஆடியவர் திணேஷ் கார்த்திக். தனது திறமையை மேலும் பளிச்சிட ஐபிஎல்லைப் பயன்படுத்திக் கொண்டார்.

மீண்டும் டெல்லிக்கே

மீண்டும் டெல்லிக்கே

கடந்த 6 தொடர்களிலும் டெல்லியுடன் இணைந்து விளையாடிய திணேஷ் கார்த்திக் உள்ளிட்ட டெல்லி அணியின் அத்தனை வீரர்களும் இந்த முறை அணியிலிருந்து கழற்றி விடப்பட்டனர். ஆனால் தற்போது மீண்டும் அவரை அணியில் எடுத்துள்ளனர்.

ரூ. 12 கோடிக்கு

ரூ. 12 கோடிக்கு

ரூ. 12 கோடிக்கு திணேஷ் கார்த்திக்கை டெல்லி அணி வாங்கியுள்ளது. இதன் மூலம் அணியின் முக்கிய நட்சத்திர வீரராக உருவெடுத்துள்ளார் திணேஷ். அனேகமாக அவருக்கு கேப்டன் பொறுப்பு கிடைக்கலாம் என்ற எதிர்பார்ப்பும் உள்ளது.

பஞ்சாபுக்கு திசரா பெரைரா

பஞ்சாபுக்கு திசரா பெரைரா

இலங்கை வீரர் திசரா பெரைராவை கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி ரூ. 1.6 கோடிக்கு எடுத்துள்ளது.

யூசுப் பதானைத் தக்க வைத்த கொல்கத்தா

யூசுப் பதானைத் தக்க வைத்த கொல்கத்தா

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி ஆல் ரவுண்டர் யூசுப் பதானை ரூ. 3.25 கோடிக்கு தக்க வைத்துக் கொண்டது.

ஸ்டீவன் ஸ்மித் ராஜஸ்தானுக்கு

ஸ்டீவன் ஸ்மித் ராஜஸ்தானுக்கு

ஆஸ்திரேலிய வீரர் ஸ்டீவன் ஸ்மித் ரூ. 4 கோடிக்கு ராஜஸ்தான் ராயல்ஸ் அணிக்குப் போயுள்ளார்.

பெங்களூருக்கு மாறிய பார்த்திவ் படேல்

பெங்களூருக்கு மாறிய பார்த்திவ் படேல்

இதுவரை சன் ரைசர்ஸ் ஹைதராபாத் அணிக்காக ஆடி வந்த பார்த்திவ் படேல் இந்த முறை பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணியால் ரூ. 1.40 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.

சாஹாவுக்குப் பஞ்சாப்

சாஹாவுக்குப் பஞ்சாப்

விருத்திமான் சாஹா பஞ்சாப் அணியால் ரூ. 2.2 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.

Story first published: Wednesday, February 12, 2014, 12:35 [IST]
Other articles published on Feb 12, 2014
English summary
Dinesh Karthcik has emerged 2nd highest costly player of the IPL 7 after Yuvaraj Singh. He was taken back by DD for Rs 12 cr.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+