Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கேதர் ஜாதவ் இரட்டை சதம் விளாசல்.. 12 இமாலய சிக்சர்கள்.. ருத்ர தாண்டவத்தால் கிண்டல்களுக்கு பதிலடி!

மும்பை : ரஞ்சி கோப்பை கிரிக்கெட் தொடரில் இன்று ஒரு பெரிய அதிசயம் நிகழ்ந்துள்ளது. ரசிகர்களால் கடுமையாக கிண்டல் செய்யப்பட்ட கேதர் ஜாதவ் இன்று தனது பேட்டிங் மூலம் ரசிகர்களுக்கு பதிலடி கொடுத்து இருக்கிறார்.

சிஎஸ்கே அணியில் இடம்பற்றிருந்த கேதர் ஜாதவ் தான், வரலாற்றிலேயே அதிக அளவு ஓட்டப்பட்ட கிரிக்கெட் வீரராக இருந்திருப்பார். கேதர் ஜாதவ் பேட்டிங், பந்துவீச்சு, ஃபில்டிங் என பன்முகம் கொண்டவர்.

ஆனால், கடந்த ஐபிஎல் 2020 ஆம் ஆண்டு கேதர் ஜாதவ் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்காக ஆடிய விதம் ரசிகர்களை வெறுப்பின் உச்சத்திற்கு கொண்டு சென்றது.

மறக்க முடியாத ஆட்டம்

மறக்க முடியாத ஆட்டம்

சென்னை தோற்றதுக்கு முக்கிய காரணமாக விளங்கிய கேதர் ஜாதவ், அந்த ஆட்டத்தில், ஃபில்டர்களை எண்ணிவிட்டு, இறங்கி வந்து டோக் என்று ஒரு கட்டையை போட, அன்று முதல் சமூக வலைத்தளத்தில் கேலி, கிண்டலுக்கு ஆளானார். இதனையடுத்து, சிஎஸ்கே அணியிலிருந்து நீக்கப்பட்ட கேதர் ஜாதவ், அதன் பிறகு சன்ரைசர்ஸ் அணிக்காக தேர்வு செய்யப்பட்டார்.

ஏலத்தில் நீக்கம்

ஏலத்தில் நீக்கம்

இந்த நிலையில், 2023ஆம் ஆண்டு ஐபிஎல் தொடருக்கான மினி ஏலத்தில் 405 வீரர்கள் கொண்ட இறுதிப் பட்டியலில் கூட கேதர் ஜாதவின் பெயர் இல்லை. ஏலத்திற்கு பெயர் கொடுத்தும் நிராகரிக்கப்பட்டதால் விரக்தியின் உச்சத்தில் இருந்த கேதர் ஜாதவ் இன்று ரஞ்சி கிரிக்கெட்டில் தன்னுடைய திறமையை வெளிப்படுத்தினார்.

 வாண வேடிக்கை

வாண வேடிக்கை

அசாம்க்கு எதிரான ஆட்டத்தில் மகாராஷ்டிரா அணிக்காக விளையாடிய கேதர் ஜாதவ் பட்டையை கிளப்பினார். வாள் தூக்கி நின்னான் பாரு, அவன் கூட சண்ட போட யாருமில்லை என்று எல்லாம் ரசிகர்கள் கேதர் ஜாதவை கிண்டல் செய்து இருக்கிறார்கள் ஆனால், அந்த பாடலுக்கு உண்மையாக விளங்கும் வகையில் கேதர் ஜாதவ் இன்று வாண வேடிக்கை காட்டினார்.

283 ரன்கள்

283 ரன்கள்

ரியான் பராக், முக்தார், சாம்ராத் போன்ற திறமையான வீரர்கள் அடங்கிய பந்துவீச்சை தான், கேதர் ஜாதவ் இன்று பதம் பார்த்தார். 283 பந்துகளை எதிர்கொண்ட அவர் 283 ரன்களை விளாசினார். இதில் 21 பவுண்டரிகளும், 12 இமாலய சிக்சர்களும் அடங்கும். இந்த இன்னிங்ஸ் மூலம், தம்மை ஏலத்தில் தேர்வு செய்யாத அணிகளுக்கும், கிண்டல் செய்த ரசிகர்களுக்கும் பதிலடி கொடுத்து இருக்கிறார் கேதர் ஜாதவ்.

Story first published: Thursday, January 5, 2023, 17:37 [IST]
Other articles published on Jan 5, 2023
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+