தல தோனி அணியில் இருந்து முக்கிய வீரர் விலகல்…? சென்னை ரசிகர்கள் அதிர்ச்சி..!
Recommended Video
சென்னை:ஐபிஎல் போட்டியில் ப்ளே ஆப் சுற்று தொடங்கிய நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியில் இருந்து முக்கிய வீரரான கேதர் ஜாதவ் விலகியதாக தகவல் வெளியாகியுள்ளது.
ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி தனது கடைசி லீக் போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொண்டது. மொகாலியில் நடந்த போட்டியில் முதலில் பேட்டிங் செய்த சென்னை அணி 20 ஓவர்கள் முடிவில் 5 விக்கெட்டுகள் இழப்புக்கு 170 ரன்கள் குவித்தது.

அதிகபட்சமாக, டு பிளெசிஸ் 96 ரன்களும், ரெய்னா 53 ரன்களும் எடுத்தனர். அடுத்து களமிறங்கிய பஞ்சாப் அணி, கே.எல்.ராகுலின் (71) அதிரடியால் 18 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து வெற்றி பெற்றது. சென்னை அணி, ஏற்கனவே ப்ளே ஆப் சுற்றுக்குள் நுழைந்துவிட்டதால், இந்தத் தோல்வியால் எந்தவித பாதிப்பும் இல்லை.
இந்தப் போட்டியில் ஆல் ரவுண்டர் கேதர் ஜாதவுக்கு காயம் ஏற்பட்டது. எனவே எஞ்சியுள்ள போட்டிகளில் அவர் விளையாடுவது சந்தேகம் என்று அப்போது தகவல்கள் வெளியாகின.
போட்டிக்கு பின்னர் பேசிய பயிற்சியாளர் பிளமிங், கேதர் ஜாதவுக்கு ஸ்கேன் எடுக்கப் போகிறார்கள். மீண்டும் அவர் தொடரில் விளையாடுவாரா என தெரியவில்லை. அவர் அசவுகரியமாக இருக்கிறார் என்று கூறினார்.
உலகக்கோப்பை தொடருக்கான 15 பேர் கொண்ட இந்திய அணியிலும் கேதர் ஜாதவ் இடம்பெற்றிருக்கிறார். இதுகுறித்து ஜாதவ் தெரிவிக்கையில், கிரிக்கெட் விளையாடும் வீரர்கள் அனைவருக்கும் தங்கள் நாட்டு உலக கோப்பை அணியில் இடம்பெற வேண்டும் என்பது கனவு.
எனக்கும் அந்த கனவு இருக்கிறது. ஆனால், இப்படியொரு இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டிருப்பது வேதனையாக இருக்கிறது. இருப்பினும், விரைவில் மீண்டு வருவேன் என்று தெரிவித்துள்ளார்.


Click it and Unblock the Notifications