Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சொல்லுங்க... யாரைப் பிடிக்கும்... "பாட்ஷாவா இல்லை ஆண்டனியா".. கேதார் ஜாதவை நெளிய வைத்த கேள்வி!

டெல்லி: ரஜினி நடித்த பாட்ஷா படத்தில் யாரைப் பிடிக்கும் பாட்ஷாவா ஆண்டனியா என்று கேட்டால் எல்லோருக்குமே ஒரு குழப்பம் வரும். காரணம் இருவருமே சூப்பராக நடித்திருப்பார்கள். அப்படி ஒரு தர்மசங்கடமான கேள்வியை நம்ம கேதார் ஜாதவிடம் கேட்டுள்ளார் ஒரு ரசிகர்.

Recommended Video

'Salman Khan Or Dhoni?': Kedar Jadhav Picks His Favourite

இந்திய கிரிக்கெட் அணியில் முக்கியமான வீரராக வலம் வருபவர் கேதார் ஜாதவ். 2014 முதல் இந்திய அணியில் இடம் பெற்று ஆடி வருகிறார். இருப்பினும் இவருக்கென ஒரு நிலையான இடம் கிடைக்கவில்லை. சில போட்டிகளில் இருப்பார்.. சிலவற்றில் இருக்க மாட்டார்.

இந்த நிலையில் தற்போதைய லாக்டவுன் சமயத்தில் கேதார் ஜாதவும் சமூக வலைதளத்தில்தான் பொழுதைப் போக்க வேண்டியுள்ளது. இந்த சமயத்தில்தான் ரசிகர்களுடன் நடந்த ஒரு இன்ஸ்டாகிராம் லைவ் சாட்டில் தர்மசங்கடமான கேள்வியைக் கேட்டு விட்டார் ஒருவர்.

சல்மான் கானா தோனியா?

சல்மான் கானா தோனியா?

உங்களுக்கு ரொம்பப் பிடிச்சது யார் சல்மான் கானா, எம்எஸ் தோனியா என்பதுதான் அந்தக் கேள்வி. அதைக் கேட்டு ஜெர்க் ஆன கேதார் ஜாதவ்.. எனக்கு எப்பவுமே பேவரைட் சல்மான் கான்தான் என்று கூறியுள்ளார். ஆனால் இந்தப் பதிலை உடனடியாக அவர் சொல்லவில்லை. இது ரொம்ப தர்மசங்கடமான கேள்வி.. அப்பா, அம்மா இவர்களில் யாரைப் பிடிக்கும் என்று கேட்பது போல உள்ளது என்று அவர் கூறியுள்ளார்.

இருவரும் சூப்பர் ஸ்டார்கள்தான்

இருவரும் சூப்பர் ஸ்டார்கள்தான்

சூப்பர் + ஸ்டார் என்பதுதான் சூப்பர் ஸ்டார். நான் இந்திய அணியில் நீண்ட காலம் விளையாட தோனிதான் காரணம். அந்த புகழ் எல்லாம் அவருக்குத்தான். அதேபோல எனது சூப்பர் ஸ்டாரான சல்மான் கானை நான் நேரில் சந்திக்க உதவியதும் கூட தோனிதான். அதை மறக்கவே மாட்டேன். அந்த வகையில் சல்மான் கானை விட தோனியை ரொம்பப் பிடிக்கும் என்று கூறியுள்ளார் கேதார் ஜாதவ்.

முதலில் தோனி.. 2வது சல்மான் கான்

முதலில் தோனி.. 2வது சல்மான் கான்

ஆனால் என்னைப் பொறுத்தவரை இருவருமே சூப்பர் ஸ்டார்தான். இவர்களை நான் வேறுபடுத்திப் பார்க்கவே முடியாது. ஆனால் நான் முதலில் சந்தித்தது தோனிதான். அவர் மூலமாகத்தான் எனது ஹீரோவை சந்தித்தேன். எனவே முதலில் தோனிதான் வருவார்.. 2வதுதான் சல்மான் கான். என்னைப் பொறுத்தவரை இருவருமே பிடித்தவர்கள்தான என்று பதிலளித்துள்ளார் கேதார் ஜாதவ்.

அதி தீவிர ரசிகர்

அதி தீவிர ரசிகர்

இந்திய அணியில் நீண்ட காலம் ஜாதவ் விளையாட உண்மையில் தோனிதான் காரணம். அவர்தான் நிறைய வாய்ப்புகளைக் கொடுத்து ஊக்குவித்தார். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியிலும் கூட ஜாதவ் இடம் பெற்றுள்ளார். அதேசமயம், சல்மான் கான் என்றால் கேதார் ஜாதவுக்கு ரொம்பப் பிடிக்கும். அதி தீவிர ரசிகரும் கூட. ஒருமுறை சதம் போட்ட போது 'தபங்' பட ஸ்டைலில் அதைக் கொண்டாடியதை ரசிகர்கள் மறந்திருக்க மாட்டார்கள்.

Story first published: Friday, April 17, 2020, 14:33 [IST]
Other articles published on Apr 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+