Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒருவழியாக ஏலத்தில் எடுக்கப்பட்ட கேதார் ஜாதவ்... 2 கோடி ரூபாய்க்கு ஏலம்!

சென்னை : பேட்டிங் ஆல்-ரவுண்டர் கேதார் ஜாதவை 2 கோடி ரூபாய்க்கு சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி ஏலத்தில் எடுத்துள்ளது.

கடந்த 2018ல் சிஎஸ்கேவால் 7.8 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட கேதார் ஜாதவ் தற்போதைய ஏலத்திற்காக சிஎஸ்கே அணியிலிருந்து விடுவிக்கப்பட்டார்.

Kedar Jadhav was bought for Rs 7.8 crore at the IPL 2018 auction

இந்நிலையில் இன்று நடைபெற்றுவரும் ஐபிஎல் 2021 ஏலத்தில் பங்கேற்ற அவர் முதல்கட்ட ஏலத்தில் தேர்ந்தெடுக்கப்படவில்லை.

கடந்த 2018ல் சிஎஸ்கே அணியால் 7.8 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்ட கேதார் ஜாதவ் அந்த சீசனில் சிறப்பான ஆட்டங்களை வழங்கவில்லை. கடந்த சீசனிலும் சிஎஸ்கேவின் இளம் வீரர்கள் சிறப்பான பங்களிப்பை அளித்த நிலையில் கேதார் ஜாதவ் சொதப்பலான ஆட்டங்களை வழங்கினார். அவருக்கு தொடர்ந்து வாய்ப்பளிக்கப்பட்டது குறித்து விமர்சனங்கள் எழுந்தன.

இந்நிலையில் இந்த ஆண்டு ஐபிஎல் 2021 சீசனுக்காக அவர் சிஎஸ்கேவிலிருந்து விடுவிக்கப்பட்டார். மேலும் அவருடைய ஆதார விலை இரண்டு கோடி ரூபாயாக நிர்ணயிக்கப்பட்ட நிலையில் முதல்கட்ட ஏலத்தில் அவரை எந்த அணியும் தேர்ந்தெடுக்கவில்லை. இந்நிலையில் அவர் தற்போது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியால் அவரது ஆதார விலையான 2 கோடி ரூபாய்க்கு ஏலத்தில் எடுக்கப்பட்டுள்ளார்.

Story first published: Thursday, February 18, 2021, 20:44 [IST]
Other articles published on Feb 18, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+