For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

கேதார் ஜாதவுக்கு முதல்ல இடம் இல்லையாம்.. காரணம் கேட்டா இடம் உண்டாம்.. என்ன நடக்குது?

மும்பை : வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடருக்கான இந்திய ஒருநாள் அணியில் கேதார் ஜாதவ் இடம் பெறவில்லை.

முதல் இரண்டு போட்டிகளில் அவர் இடம் பெறாத நிலையில், கடைசி மூன்று ஒருநாள் போட்டிகளுக்கான அணி அறிவிக்கப்பட்ட போதும் அவர் இந்திய அணியில் இடம் பெறவில்லை.

இந்த விஷயம் ஊடங்கங்களில் வெளியானதை அடுத்து, கேதார் ஜாதவ் கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளுக்கான அணியில் வலிந்து சேர்க்கப்பட்டுள்ளார். இது ரசிகர்கள் மத்தியில் விமர்சனத்துக்கு உள்ளாகி இருக்கிறது.

ஜாதவுக்கு காயம்

ஜாதவுக்கு காயம்

ஆசிய கோப்பை இறுதிப் போட்டியில் கேதார் ஜாதவுக்கு தசைப் பிடிப்பு ஏற்பட்டது. அந்த தொடரில் ஆல்-ரவுண்டராக இந்திய அணிக்கு பெரும் உதவியாக இருந்தார் ஜாதவ். பந்துவீச்சிலும், தேவையான சமயத்தில் பேட்டிங்கிலும் கை கொடுத்தார். எனினும், காயம் காரணமாக வெஸ்ட் இண்டீஸ் ஒருநாள் தொடரில் முதல் இரண்டு போட்டிகளுக்கான அணியில் அவர் இடம் பெறவில்லை.

ஜாதவ் நிரூபித்தும் இடம் இல்லை

ஜாதவ் நிரூபித்தும் இடம் இல்லை

அடுத்து தியோதர் ட்ராபியில் ஒரு போட்டியில் ஆடி தன் பார்மை நிரூபித்தார். அதற்கு முன்பே பல உடற்தகுதி தேர்வுகளில் பங்கேற்று தேர்ச்சி பெற்றும் விட்டார். எனினும், கடைசி மூன்று போட்டிகளுக்கான அணியில் அவர் பெயர் இடம் பெறவில்லை. இந்த விஷயம் ஊடகங்களில் வெளியான இரண்டாம் நாள், கடைசி இரண்டு ஒருநாள் போட்டிகளில் ஜாதவ் சேர்க்கப்பட்டதோடு, விளையாடும் பதினோரு பேர் கொண்ட அணியிலும் இடம் பிடித்து விட்டார்.

ஊடகங்கள் மீது பயமா?

தேர்வுக் குழு ஊடகங்களுக்கு பயந்து போய் தான் அவரை மீண்டும் இணைத்துக் கொண்டனர் என ட்விட்டரில் ரசிகர்கள் கிண்டல் செய்து வருகிறார்கள். இந்த ரசிகர், கேதார் ஜாதவ் ஊடகத்தில் தன் நிலையை பற்றி பேசிய பின்னர் வாய்ப்பு பெற்று விட்டார். தினேஷ் கார்த்திக் கூட அதே போல வாய்ப்பு பெற வேண்டும் என கூறுகிறார்.

தேர்வுக் குழு சரி இல்லையே

தேர்வுக் குழு சரி இல்லையே

இந்திய கிரிக்கெட் தேர்வுக் குழுவின் நடவடிக்கைகள் சமீப காலமாக கடும் விமர்சனத்துக்கு உள்ளாகி உள்ளது. முரளி விஜய், கருண் நாயர், கேதார் ஜாதவ் நீக்கங்கள், ஷிகர் தவான் டெஸ்ட் அணியில் இருந்து நீக்கம் செய்யப்பட்டது. ரோஹித்துக்கு நீண்ட காலமாக டெஸ்ட் அணியில் வாய்ப்பு கொடுக்காமல் இருந்தது என எராளமான குற்றச்சாட்டுக்கள் அவர்கள் மீது உள்ளன.

Story first published: Monday, October 29, 2018, 18:00 [IST]
Other articles published on Oct 29, 2018
English summary
Kedhar Jadhav added to ODI squad again after media reports he was dropped
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X