Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒடாயோ இங்க வாங்க.. டிக்கோலோ நீங்களும் வாங்க.. !

நைரோபி: பழம்பெரும் கிரிக்கெட் வீரர்களான ஸ்டீவ் டிக்கோலோ மற்றும் தாமஸ் ஒடாயோ ஆகிய இருவரையும் கென்ய அணியில் வந்து விளையாடுமாறு அந்த நாட்டு கிரிக்கெட் வாரியம் அழைத்துள்ளது.

இருவரும் பழைய வீரர்கள். இவர்களில் டிக்கோலோ கேப்டனாக இருந்தவர். ஒடாயோ துணைக் கேப்டனாக இருந்தவர்கள். 2011ம் ஆண்டு உலகக் கோப்பையுடன் இவர்கள் ஓய்வு பெற்றுப் போய் விட்டனர்.

ஆனால் இப்போது விளையாட நல்ல வீரர்கள் இல்லாமல் திணறி வரும் கென்யா, உலகக் கோப்பை டுவென்டி 20 தகுதிச் சுற்றுப் போட்டியில் இவர்களை அணியில் வந்து சேருமாறு அழைத்துள்ளது.

டிக்கோலோவுக்கு 42 வயது

டிக்கோலோவுக்கு 42 வயது

டி்ககோலோவுக்கு 42 வயதாகிறது. உள்ளூர் போட்டியில் தொடர்ந்து விளையாடி வருகிறார். அதேபோல 36 வயதாகும் ஒடாயோவும் உள்ளூர் போட்டிகளில் ஆடி வருகிறார்.

தொடர் தோல்வியால் சோகம்

தொடர் தோல்வியால் சோகம்

கென்ய அணி தொடர்ந்து தோல்விகளைய்ச் சந்தித்து வருகிறது. ஐசிசி இன்டர்கான்டினென்டல் கோப்பை, உலக கிரிக்கெட்ல லீக் போட்டிகளில் இது தோல்வியடைந்தது.

டுவென்டி 20யில் நுழைய மும்முரம்

டுவென்டி 20யில் நுழைய மும்முரம்

இந்த நிலையில் உலகக் கோப்பை டுவென்டி 20 தொடரில் பங்கேற்க முனைப்புடன் உள்ளது கென்யா.

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தகுதிப் போட்டி

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் தகுதிப் போட்டி

ஐக்கிய அரபு எமிரேட்ஸில் இதற்கான தகுதிப் போட்டி அடுத்த மாதம் நடைபெறுகிறது. இதில் கென்யாவும் பங்கேற்கிறது. இதில்வெல்லும் பொருட்டே பழைய வீரர்களை அது அழைத்துள்ளது.

மொத்தம் 16 அணிகள்

மொத்தம் 16 அணிகள்

இந்தத் தகுதிச் சுற்றுத் தொடரில் மொத்தம் 16 அணிகள் பங்கேற்கின்றன. இதிலிருந்து ஆறு அணிகள் 2014ம் ஆண்டு வங்கதேசத்தில் நடைபெறும் உலகக் கோப்பை டுவென்டி 20 தொடருக்குத் தகுதி பெறும்.

Story first published: Friday, October 25, 2013, 17:33 [IST]
Other articles published on Oct 25, 2013
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+