பெங்களூரு: விஜய் ஹசாரே தொடங்கிய கேரளா அணியின் கேப்டன் சஞ்சு சாம்சன் சிறப்பாக விளையாடி சதம் விளாசி அசத்தியுள்ளார்.
பிசிசிஐ நிர்வாகத்தால் தொடர்ச்சியாக புறக்கணிக்கப்பட்டு வரும் வீரர்களில் முதன்மையானவர் சஞ்சு சாம்சன். 8 ஆண்டுகளுக்கு முன்பாகவே இந்திய அணிக்கு தேர்வு செய்யப்பட்டும், இதுவரை போதிய வாய்ப்பு கிடைக்காமல் தவித்து வருகிறார். ஐபிஎல் தொடரில் ஒரு அணிக்கு தலைமை தாங்கி வந்தாலும், இதுவரை பிசிசிஐ பாராமுகம் காட்டி வருகிறது.

இந்த நிலையில் டி20 உலகக்கோப்பை நெருங்கி வரும் சூழலில், சஞ்சு சாம்சன் ஒருநாள் அணியில் தேர்வு செய்யப்பட்டுள்ளார். இந்த நிலையில் தென்னாப்பிரிக்கா சுற்றுப்பயணத்திற்கு தயாராகும் வகையில் விஜய் ஹசாரே தொடரில் சஞ்சு சாம்சன் விளையாடி வருகிறார். இந்த நிலையில் இன்று பெங்களூருவில் நடைபெற்ற ஆட்டத்தில் கேரளா அணியை எதிர்த்து ரயில்வே அணி களமிறங்கியது.
இந்த போட்டியில் டாஸ் வென்ற கேரளா அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இதையடுத்து முதலில் பேட்டிங் ஆடிய ரயில்வே அணி 50 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 255 ரன்கள் சேர்த்தது. சிறப்பாக ஆடிய சஹாப் யுவராஜ் 136 பந்துகளில் 121 ர்டன்களை விளாசினார். கேரளா அணி தரப்பில் வைஷாக் சந்திரன் 2 விக்கெட்டுகளை வீழ்த்தி அசத்தினார்.
இதையடுத்து களமிறங்கிய கேரளா அணி 59 ரன்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது. இதன்பின் கேப்டன் சஞ்சு சாம்சன் - ஸ்ரேயாஸ் ஐயர் கூட்டணி இணைந்து சிறப்பான பார்ட்னர்ஷிப் அமைத்தனர். இருவரும் 5வது விக்கெட்டுக்கு 138 ரன்கள் பார்ட்னர்ஷிப் அமைத்தனர். சிறப்பாக ஆடிய கோபால் 53 ரன்களில் ஆட்டமிழக்க, பின்னர் டெய்லண்டர்களுடன் இணைந்து சஞ்சு சாம்சன் அதிரடிக்கு மாறினார்.
சிறப்பாக ஆடிய சஞ்சம் சாம்சன் 139 பந்துகளில் 6 சிக்ஸ், 8 பவுண்டரி உட்பட 128 ரன்களை விளாசி ஆட்டமிழந்தார். இறுதியாக 50 ஓவர்களில் 8 விக்கெட்டுகள் இழப்பிற்கு 237 ரன்களை மட்டுமே எடுத்து 18 ரன்கள் வித்தியாசத்தில் கேரளா அணி தோல்வியை சந்தித்தது. இருப்பினும் சஞ்சு சாம்சனின் ஆட்டம் ரசிகர்களிடையே பாராட்டுகளை பெற்று வருகிறது. அதுமட்டுமல்லாமல் சஞ்சு சாம்சன் 5வது வீரராக களமிறஃங்கி சதம் விளாசியது பல்வேறு விவாதங்களையும் ஏற்படுத்தியுள்ளது.