Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பிரபல கிரிக்கெட் வீரர் ஸ்ரீசாந்த் மருத்துவமனையில் அனுமதி..!! முடிவுக்கு வந்ததா கிரிக்கெட் வாழ்க்கை?

திருவனந்தபுரம்: பிரபல இந்திய கிரிக்கெட் வேகப்பந்துவீச்சாளர் ஸ்ரீசாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

39 வயதான ஸ்ரீசாந்த், ஐபிஎல் சூதாட்ட புகாரில் சிக்கியதால், அவர் மீது பிசிசிஐ வாழ்நாள் தடையை விதித்தது.

இந்த நிலையில், தம் மீது தவறு இல்லை என்று நீதிமன்றம் மூலம் நிரூபித்த ஸ்ரீசாந்த், தமக்கு விதிக்கப்பட்ட தடையை உடைத்து கிரிக்கெட் களத்துக்கு திரும்பினார்.

ரஞ்சி கோப்பை

ரஞ்சி கோப்பை

எனினும் ஸ்ரீசாந்த்தை பிசிசிஐ கண்டு கொள்ளாமல் இருந்தது. இதனால் இந்தி பிக் பாஸ், திரைப்படம் , ரியாலிட்டி ஷோ என வாழ்க்கையை நகர்த்தி வந்த ஸ்ரீசாந்த்துக்கு, கேரள ரஞ்சி கோப்பையில் விளையாட வாய்ப்பு கிடைத்தது. இதனையடுத்து, ரஞ்சி போட்டிக்காக ஸ்ரீசாந்த் கடுமையாக பயிற்சி செய்து வந்தார்.

ஏமாற்றம்

ஏமாற்றம்

இதே போன்று, ஐபிஎல் மெகா ஏலத்தில் ஸ்ரீசாந்த் தனது பெயரை பதிவு செய்து காத்திருந்தார். அவர் தனது விலையை 50 லட்சம் ருபாயாக நிர்ணயித்து இருந்தார். ஆனால், எந்த ஐபிஎல் அணியும் ஸ்ரீசாந்தை ஏலத்தில் தேர்வு செய்யவில்லை. இதனால் ஸ்ரீசாந்த் ஏமாற்றம் அடைந்தார். இதனால் மீண்டும் ரஞ்சி போட்டியில் கவனம் செலுத்த தொடங்கினார்.

9 ஆண்டுகள்

9 ஆண்டுகள்

9 ஆண்டுகளுக்கு பிறகு பிசிசிஐ நடத்தும் போட்டியில் பங்கேற்ற ஸ்ரீசாந்த், 40 ரன்களை விட்டு கொடுத்து 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார். இந்த நிலையில், 2வது போட்டிக்காக ஸ்ரீசாந்த் தயாராகி கொண்டிருந்தார். அப்போது அவருக்கு எதிர்பாராத விதமாக காயம் ஏற்பட்டது. இந்த நிலையில், ஸ்ரீசாந்த் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

மருத்துவமனையில் அனுமதி

மருத்துவமனையில் அனுமதி

இது தொடர்பாக டிவிட்டரில் ஸ்ரீசாந்த், மருத்துவமனையில் இருப்பது போன்ற புகைப்படம் வெளியாகியுள்ளது. இதனால் ஸ்ரீசாந்துக்கு காயத்திற்காக அறுவை சிகிச்சை மேற்கொள்ளப்பட்டதா இல்லை வேறு ஏதேனும் உடல் நலக்குறைவு ஏற்பட்டதா என்பது குறித்து ஸ்ரீசாந்த் தரப்பு தெரிவிக்கவில்லை. இதனால் ஸ்ரீசாந்தின் கிரிக்கெட் வாழ்க்கை முடிவுக்கு வந்துள்ளது.

Story first published: Tuesday, March 1, 2022, 15:08 [IST]
Other articles published on Mar 1, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+