Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

காலை மடக்கி.. உடம்பை குப்புற கவிழ்த்து.. கையை விரித்து.. தம்பி! பவுலிங் போட சொன்னா என்னப்பா பண்ற?

Recommended Video

T10 Cricket | kevin koththigoda bowling action | கெவின் கோத்திகோடாவின் வித்தியாசமான பந்துவீச்சு

அபுதாபி : இலங்கை சுழற் பந்துவீச்சாளர் ஒருவர் விசித்திர பந்துவீச்சால் கிரிக்கெட் உலகை திரும்பிப் பார்க்க வைத்துள்ளார்.

கிரிக்கெட் வீரர்கள் தங்களை நிலை நிறுத்திக் கொள்ள பெரிய அளவில் போட்டியை சந்தித்து வரும் நிலையில், புதிய வழிமுறைகளை உருவாக்கி வருகிறார்கள்.

அந்த வழியில் விசித்திர முறையில் ஓடி வந்து, குப்புற கவிழ்ந்து பந்து வீசி வியப்பில் ஆழ்த்தினார் இலங்கை வீரர் கெவின் கோத்திகோடா.

அபுதாபி டி10 தொடர்

அபுதாபி டி10 தொடர்

அபுதாபியில் 10 ஓவர் கிரிக்கெட் தொடர் நடைபெற்று வருகிறது. இந்த தொடரில் இந்திய வீரர்கள் யுவராஜ் சிங், ஜாகிர் கான் உள்ளிட்டோரும் கூட பங்கேற்றுள்ளனர். இந்த தொடரில் பங்களா டைகர்ஸ் அணிக்காக ஆடி வருகிறார் கெவின்.

திகைக்க வைத்தார்

திகைக்க வைத்தார்

கர்நாடகா டஸ்கர்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் பந்து வீசிய கெவின், தன் விசித்திர பந்துவீச்சை காட்டி அனைவரையும் திகைக்க வைத்தார். உடனடியாக சில ரசிகர்கள் அதை வீடியோ எடுத்து இணையத்தில் பதிவிட்டனர்.

எப்படி வீசினார்?

கெவின் பந்து வீசுகையில், காலை X வடிவத்தில் மடக்கி ஓடி வருகிறார். பின் கால்களை பக்கவாட்டில் வைத்துக் கொண்டு, உடலை அம்பயரை திரும்பி பார்க்கும் வகையில் மாற்றி, இரண்டு கைகளையும் பின் நோக்கி எடுத்துச் சென்று, பந்தை வீசுகிறார்.

அம்பயரை பார்க்கும் பவுலர்

அம்பயரை பார்க்கும் பவுலர்

அவர் பந்து வீசும் போது, பேட்ஸ்மேனையோ, ஸ்டம்புகளையோ பார்க்கவில்லை. மாறாக, அம்பயரை பார்த்துக் கொண்டு பந்தை வீசுகிறார். பந்து கையை விட்டு சென்ற பின்னரே பேட்ஸ்மேனை பார்க்கிறார்.

பால் ஆடம்ஸ் உதாரணம்

இவரது பந்துவீச்சு தென்னாப்பிரிக்க சுழற் பந்துவீச்சாளர் பால் ஆடம்ஸ் போல இருப்பதாக சிலர் கூறி உள்ளனர். இது போன்ற பந்து வீச்சு களத்தில் எடுபடுமா? என்ற கேள்வியும் உள்ளது.

என்னை ஈர்க்கவில்லை

இது போல பேட்ஸ்மேனை, ஸ்டம்ப்பை பார்க்காமல் பந்து வீசுவது என்னை ஈர்க்கவில்லை என ஒருவர் விமர்சனம் செய்துள்ளார் அதற்கு ஒருவர், பால் ஆடம்ஸ்-ஐ உதாரணம் காட்டி, அவர் 45 டெஸ்ட் போட்டிகளில் 145 விக்கெட்கள் வீழ்த்தினார் என கூறி இருக்கிறார்.

முதல் முறையல்ல

முதல் முறையல்ல

இது போன்ற விசித்திர பந்து வீச்சை ஒரு பந்துவீச்சாளர் செய்வது முதல் முறையல்ல. கடந்த 2016ஆம் ஆண்டு குஜராத் லயன்ஸ் ஐபிஎல் அணிக்காக ஆடிய சிவில் கௌஷிக் என்ற இந்திய பந்துவீச்சாளர் தன் பந்து வீச்சுக்காக அப்போது பரபரப்பாக பேசப்பட்டார்.

உடல் உழைப்பு

கெவின் வித்தை காட்டி பந்து வீசினாலும், பந்து அதிகம் சுழலவில்லை. வெறும் உடல் உழைப்பு மட்டும் தான் உள்ளது என ஒருவர் சுட்டிக் காட்டி இருக்கிறார்.

Story first published: Monday, November 18, 2019, 20:45 [IST]
Other articles published on Nov 18, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+