Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

பான் கார்டை தொலைத்த பீட்டர்சன்.. சட்டென களத்தில் குதித்த இந்திய அரசு.. என்ன நடந்ததுன்னு பாருங்களேன்!

மும்பை: கெவீன் பீட்டர்சன் தனது பான் கார்டை தொலைத்துவிட்டதாக கூறிய சில நிமிடங்களில் இந்திய அரசு எடுத்த நடவடிக்கை பாராட்டுக்களை பெற்று வருகிறது.

இங்கிலாந்து கிரிக்கெட் அணியின் முன்னணி வீரராக திகழ்ந்தவர் கெவின் பீட்டர்சன்.

அனைத்து வடிவ போட்டிகளில் இருந்தும் ஓய்வு பெற்ற அவர், தற்போது தொலைக்காட்சி வர்ணனையாளர் மற்றும் பயிற்சியாளராக செயல்பட்டு வருகிறார்.

என்ன பிரச்சினை

என்ன பிரச்சினை

ஐபிஎல் தொடர் மூலம் இந்தியாவில் நன்கு பிரபலமடைந்தார் கெவீன் பீட்டர்சன். ஏனென்றால் ஸ்டார் ஸ்போர்ட்ஸ் நிறுவனத்தின் முக்கிய தொகுப்பாளராக பணியாற்றி வருகிறார். இதன் காரணமாக இவர் அடிக்கடி இந்தியாவுக்கு வருகை தருவது வழக்கம். இந்நிலையில் தனது பான் கார்டை எங்கோ தவறவிட்டுள்ளார்.

 உதவிக்கோரி ட்வீட்

உதவிக்கோரி ட்வீட்

இதுகுறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்ட பீட்டர்சன், இந்தியா தயவு செய்து உதவுங்கள் , நான் எனது பான் கார்டை தவறவிட்டுவிட்டேன். நான் பணி நிமத்தமாக இந்தியா வந்திருப்பதால், எனக்கு பான் கார்ட் அவசரமாக தேவைப்படுகிறது. இதற்காக நான் என்ன செய்ய வேண்டும் என்பதை கூறி யாரேனும் உதவுங்கள் என ட்வீட் போட்டார்.

உடனடி நடவடிக்கை

உடனடி நடவடிக்கை

அவர் ட்வீட் போட்ட அடுத்த 40 நிமிடங்களில் இந்திய வருமான வரித்துறை நடவடிக்கை எடுத்தது. அதாவது ட்விட்டர் பக்கத்தில், " அன்பான பீட்டர்சன், நாங்கள் உங்களுக்கு உதவுவதற்காக தான் உள்ளோம். நாங்கள் அனுப்பியுள்ள ஒரு லிங்க்-ல் உங்களது பான் கார்ட் விவரங்களை பதிவு செய்து மீண்டும் புதிதாக ஒன்றை உடனடியாக பெற்றுக்கொள்ளுங்கள் எனத் தெரிவித்துள்ளது. ஒருவேளை விவரங்கள் தெரியவில்லை என்றால் மெயில் அனுப்புங்கள் என முகவரியையும் அனுப்பியுள்ளது.

ஆச்சரியப்பட்ட பீட்டர்சன்

ஆச்சரியப்பட்ட பீட்டர்சன்

இதனை பார்த்து வியந்துப்போன பீட்டர்சன், அருமை, மிக்க நன்றி... நீங்கள் கூறியது போன்று செய்துவிட்டேன். உங்களில் இருந்து யாரேனும் ஒருவர் என்னை தொடர்புக்கொண்டால் நான் பேசி பிரச்சினைகளை விளக்க முடியும், அதற்கு ஏற்பாடு செய்ய முடியுமா எனக் கேட்டுள்ளார்.

கொந்தளித்த ரசிகர்கள்

கொந்தளித்த ரசிகர்கள்

இது தற்போது இணையத்தில் அதிகளவில் பேசப்பட்டு வருகிறது. ஒரு சிலர், "பிரபலத்திற்கு உதவி வேண்டும் என்றவுடன் இந்திய வருமான வரித்துறையே இறங்கி வந்து உதவி செய்கிறது. ஆனால் இந்திய மக்களில் எத்தனை பேருக்கு இதுபோன்ற உடனடி பதில்களை கொடுத்துள்ளீர்கள் எனக் கொந்தளித்துள்ளனர்.

Story first published: Wednesday, February 16, 2022, 13:26 [IST]
Other articles published on Feb 16, 2022
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+