Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ஒட்டுமொத்த கிரிக்கெட் உலகிலும் ஆகச் சிறந்த கேப்டன் தோனி தான்.. முன்னாள் இங்கிலாந்து வீரர் அதிரடி!

லண்டன் : தோனி சிறந்த கேப்டன் என்பதில் மாற்றுக் கருத்து இல்லை. ஆனால், இதுவரை கிரிக்கெட்டில் இருந்த அத்தனை கேப்டன்களிலும் தோனி தான் சிறந்தவர் எனக் கூறினால்?

Recommended Video

ஒட்டுமொத்த கிரிக்கெடிலும் சிறந்த கேப்டன் தோனி தான் - கெவின் பீட்டர்சன்

அப்படித் தான் கூறி இருக்கிறார் முன்னாள் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன். தீவிர தோனி ரசிகர்கள் இப்படி சொல்லி இருந்தால் ஆச்சரியம் இல்லை.

ஆனால், சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக அறியப்படும் கெவின் பீட்டர்சன் இப்படி கூறி இருப்பது தான் ஆச்சரியம் அளித்துள்ளது.

சிறந்த கேப்டன்கள் பட்டியல்

சிறந்த கேப்டன்கள் பட்டியல்

கிரிக்கெட்டில் சிறந்த கேப்டன்கள் என பட்டியலிட்டால் குறைந்தது பத்து கேப்டன்களையாவது பட்டியலிட நேரிடும். கிளைவ் லாயிட், கபில் தேவ், ஆலன் பார்டர், ஸ்டீவ் வாஹ், இம்ரான் கான், ரிக்கி பாண்டிங், கிரேம் ஸ்மித், சௌரவ் கங்குலி என பலரை நாம் குறிப்பிட வேண்டி இருக்கும்.

தோனிக்கும் இடம் உண்டு

தோனிக்கும் இடம் உண்டு

இந்த வரிசையில் நிச்சயம் தோனிக்கும் இடம் உண்டு. ஆனால், இவர்கள் எல்லோரையும் விட தோனி சிறந்தவர் என ஒரே வரியில் கூறி விட முடியாது. ஆனால், கெவின் பீட்டர்சன் அப்படித் தான் கூறி இருக்கிறார். அதற்கு அவர் ஒரு காரணமும் கூறி உள்ளார்.

பீட்டர்சன் சொன்ன காரணம்

பீட்டர்சன் சொன்ன காரணம்

தோனியின் உயர்வுக்கு எதிராக விவாதம் செய்வது மிக மிக கடினம் என கூறி உள்ளார் கெவின் பீட்டர்சன், தன் மீது இருந்த மிகப் பெரும் எதிர்பார்ப்பை தாண்டி தோனி கேப்டனாக சிறப்பாக செயல்பட்டார் என காரணம் கூறி உள்ளார்.

எதிர்பார்ப்பு அதிகம்

எதிர்பார்ப்பு அதிகம்

"தோனி மீது இருக்கும் எதிர்பார்ப்பின் அளவை கொண்டு பார்த்தால் அது மிகவும் கடினமானது. ஒவ்வொருவரும் அவரிடம் என்ன எதிர்பார்ப்பார்கள், அவர் எப்படி தன் வாழ்க்கையை வாழ்வது, இந்தியாவுக்கு கேப்டனாக இருந்த போதும், பின்பு சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கேப்டனாக இருந்த போதும் என்னவெல்லாம் அவர் எதிர்கொண்டார் என்பது மிக கடினமானது" என குறிப்பிட்டார் பீட்டர்சன்.

வெற்றிநடை போட்ட இந்தியா

வெற்றிநடை போட்ட இந்தியா

தோனி தலைமையில் தான் இந்திய அணி இரண்டு உலகக்கோப்பை மற்றும் ஒரு சாம்பியன்ஸ் ட்ராபி தொடரை வென்றது. தோனி கேப்டன்சியில் 2007 டி20 உலகக்கோப்பை, 2011 ஒருநாள் போட்டி உலகக்கோப்பை மற்றும் 2013 சாம்பியன்ஸ் ட்ராபி தொடர் என மூன்று முக்கிய தொடர்களை வென்றது இந்தியா.

Story first published: Saturday, April 18, 2020, 20:34 [IST]
Other articles published on Apr 18, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+