ஏ.ஆர் ரஹ்மானையும் விட்டுவைக்காத கெவின் பீட்டர்சன்... இந்த வெட்டு வெட்டறாரே!
டெல்லி : கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் இருந்தாலும் இருக்கிறார். முன்னாள் இங்கிலாந்து கேப்டன் கெவின் பீட்டர்சனின் ரவுசுக்கு அளவே இல்லாமல் போய்விட்டது.
தொடர்ந்து தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கங்களில் அவர் பல்வேறு பாடல்களுக்கு டிக்டாக் வீடியோக்களை உருவாக்கி பதிவிட்டு வருகிறார். இந்திய பாடல்களையும் அவர் விட்டு வைக்கவில்லை.
இந்நிலையில் ஏஆர் ரஹ்மான் இசையில் வெளிவந்த தமிழ் பாடல் ஒன்று அவர் கண்ணில் பட்டுள்ளது. அதற்கு அவர் செய்துள்ள டிக்டாக் வீடியோவை ஏஆர் ரஹ்மானே தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

சமூக வலைதளங்களில் பரபர
முன்னாள் இங்கிலாந்து கேப்டன் கெவின் பீட்டர்சன் கொரோனா வைரஸ் ஊரடங்கு காரணமாக தன்னுடைய வீட்டில் முடங்கியுள்ளார். இவர் முடங்கியுள்ளார் என்று கூறுவது பொருத்தமாக இருக்காது. அந்த அளவிற்கு பல விஷயங்களை செய்து வருகிறார் பீட்டர்சன். தினமும் பல வீடியோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தல் பதிவிட்டு வருகிறார். சமயத்தில் தன்னுடைய குடும்பத்தினரையும் இதில் இணைக்கிறார்.

விராட் கோலியுடன் கலந்துரையாடல்
கொரோனா வைரஸ் காரணமாக விளையாட்டு வீரர்களை இணைக்கும்வகையில் இன்ஸ்டாகிராம் பல்வேறு நேரலை கலந்துரையாடல்களை செய்து வருகிறது. இதையொட்டி கடந்த மாதத்தில் பீட்டர்சன் மற்றும் விராட் கோலி இருவரும் நேரலையில் இணைந்து ஐபிஎல், கொரோனா வைரஸ் பாதிப்பு உள்ளிட்ட பல்வேறு விஷயங்கள் குறித்து கலந்துரையாடினர்.

ரசிகர்களை கவர்ந்த வீடியோக்கள்
கொரோனா வைரஸ் காரணமாக வீட்டில் உள்ள பீட்டர்சன் பல்வேறு வீடியோக்களை தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு வந்த நிலையில், கடந்த சில தினங்களில் பல்வேறு டிக்டாக் வீடியோக்களை தன்னுடைய பக்கத்தில் பதிவிட்டு வருகிறார். இதில் இந்திய பாடல்களையும் விட்டு வைக்காமல் டிக்டாக் வீடியோக்களை செய்து வருகிறார்.

வைரலான பீட்டர்சன் டிக்டாக்

Click it and Unblock the Notifications