Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

எங்களை கேலி செய்கிறீர்களா கோலி… ? வம்பிழுக்கும் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன்

லண்டன்:எங்களை கேலி செய்கிறீர்களா கோலி என்று இங்கிலாந்து முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் வேடிக்கையாக கூறியுள்ளார்.

ராஞ்சியில் நடைபெற்ற 3 வது ஒருநாள் போட்டியில் ஆஸ்திரேலிய அணி இந்திய அணியை 32 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி கண்டது. அதில் இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி 95 பந்துகளில் 16 பவுண்டரிகள் 1 சிக்சருடன் 123 ரன்கள் எடுத்தார்.

Kevin pietersen lauds kohli after back to back hundreds

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான இந்தத் தொடரில் விராட் கோலி அடிக்கும் தொடர் 2வது சதமாகும். தொடர்ச்சியாக சதம் அடித்த விராட் கோலிக்கு கிரிக்கெட் பிரபலங்கள் பலரும் வாழ்த்துகளை கூறி வருகின்றனர்.

அதில் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் விராட் கோலியின் தொடர் சதத்துக்கு வாழ்ந்து தெரிவித்திருக்கிறார். அவர் தமது டுவிட்டர் பக்கத்தில் அதை பகிர்ந்திருக்கிறார்.

மேலும் இது குறித்து அவர் தனது ட்விட்டர் பக்கத்தில் கூறியிருப்பதாவது:நீங்கள் எங்களை கேலி செய்கிறீர்களா கோலி? நாங்கள் எல்லாம் சாதாரணமாக விளையாடுகிறோம் என்று... அதாவது நாங்கள்லாம் ஏதோ பரவாயில்லாமல் பேட் செய்கிறோம்... எங்களிடம் திறமையில்லை அதானே சொல்ல வருகிறீர்கள்.. என்று வேடிக்கையாக கோலியை புகழ்ந்துள்ளார்.

Story first published: Saturday, March 9, 2019, 14:16 [IST]
Other articles published on Mar 9, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+