Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டெல்லி டேர்டெவில்ஸ் கேப்டனானார் 'அன்எம்ப்ளாய்ட்' கெவின் பீட்டர்சன்!

டெல்லி: இங்கிலாந்து அணியிலிருந்து திடீரென துரத்தி விடப்பட்டு நட்டாற்றில் விடப்பட்ட கெவின் பீ்ட்டர்சனுக்கு கேப்டன் வேலை கொடுத்துள்ளது டெல்லி டேர்டெவில்ஸ் அணி.

7வது ஐபிஎல் தொடரில் பீட்டர்சன்தான் கேப்டனாக செயல்படுவார் என்று அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த காலங்களில் கம்பீர், டேவிட் வார்னர், மஹள ஜெயவர்த்தனே ஆகியோரது தலைமையில் ஆடி வந்த டெல்லி அணி கடந்த தொடரில் படு கேவலமான தோவில்களைச் சந்தித்தது. இதனால் அணியை கூண்டோடு கலைத்து விட்டு புதிதாக வீரர்களை வாங்கியுள்ளனர். இந்த அணிக்குத்தான் தற்போது பீட்டர்சன் தலைவராகியுள்ளார்.

துணை கேப்டன் திணேஷ் கார்த்திக்

துணை கேப்டன் திணேஷ் கார்த்திக்

பெரும் விலை கொடுத்து வாங்கப்பட்ட திணேஷ் கார்த்திக் விகெட் கீப்பராகவும் துணை கேப்டனாகவும் செயல்படுவார்.

பீட்டர்சன் மகிழ்ச்சி

பீட்டர்சன் மகிழ்ச்சி

கேப்டன் பொறுப்பு குறித்து பீட்டர்சன் கூறுகையில், மிகவும் கவுரமாக உணர்கிறேன். கேரி கிர்ஸ்டனுடன் இணைந்து இதில் செயல்படப் போகிறேன். இந்தப் பணியை ஆவலுடன் எதிர்நோக்கியுள்ளேன்.

நல்ல அணி நல்ல அணி

நல்ல அணி நல்ல அணி

டெல்லி அணி அனுபவம் மற்றும் இளம் வீரர்கள் என இரு தரப்பையும் கொண்ட சரிவிகித சமானத்துடன் கூடிய அணியாகும். சிறந்த போட்டியை நாங்கள் கொடுக்க முயற்சிப்போம் என்றார் பீட்டர்சன்.

முழு தொடருக்கும் ஆடுவார்

முழு தொடருக்கும் ஆடுவார்

தற்போது இங்கிலாந்து கிரிக்கெட் அணியில் பீட்டர்சன் இல்லை என்பதால் முழுத் தொடரிலும் அவர் ஆடவுள்ளார். எனவே நிச்சயம் எதிர்அணியினருக்கு கிலியான விஷயம்தான் இது.

வயது 33. விலை ரூ. 9 கோடி

வயது 33. விலை ரூ. 9 கோடி

33 வயதாகும் பீட்டர்சன் டெல்லி அணியால் ரூ. 9 கோடிக்கு வாங்கப்பட்டுள்ளார்.

2012ல் பிரமாதப்படுத்தியவர்

2012ல் பிரமாதப்படுத்தியவர்

கெவின் ஏற்கனவே டெல்லி அணிக்காக 2012 தொடரில் விளையாடி 8 போட்டிகளில் 305 ரன்களைக் குவித்தவர் என்பது நினைவிருக்கலாம். ஆனால் 2013ல் அவரால் டெல்லி அணிக்காக ஆட முடியவில்லை.

12.5 கோடி கார்த்திக்

12.5 கோடி கார்த்திக்

திணேஷ் கார்த்திக் ரூ. 12.5 கோடிக்கு விலைக்கு வாங்கப்பட்டவர். யுவராஜ் சிங்குக்கு அடுத்து இவர்தான் நடப்பு ஐபிஎல் தொடரில் பெரும் விலைக்கு ஏலம் எடுக்கப்பட்டவர் ஆவார்.

92 போட்டிகளில் 1741 ரன்கள்

92 போட்டிகளில் 1741 ரன்கள்

92 ஐபிஎல் போட்டிகளில் ஆடியுள்ள திணேஷ் கார்த்திக் 1741 ரன்களைக் குவித்துள்ளார்.

ஏப்ரல் 16 முதல்

ஏப்ரல் 16 முதல்

ஏப்ரல் 16ம் தேதி ஐக்கிய அரபு எமிரேட்ஸில் ஐபிஎல் போட்டிகள் தொடங்குகின்றன.

Story first published: Tuesday, March 18, 2014, 16:54 [IST]
Other articles published on Mar 18, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+