Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

போட்டிக்கு நாங்க வரலாமா...தடுமாறிய இங்கிலாந்து....தேர்வுக்குழுவுக்கு பீட்டர்சனின் குறும்பு மெசேஜ்

ராய்ப்பூர்: இந்தியா லெஜெண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற்ற பிறகு இங்கிலாந்து தேர்வுக்குழுக்கு முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் குசும்புத்தனமாக மெசேஜ் ஒன்றை அனுப்பியுள்ளார்.

சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் உலக நாடுகளின் முன்னாள் கிரிக்கெட் வீரர்கள் கலந்து கொள்ளும் சாலை பாதுகாப்பு டி 20 உலக தொடர் ராய்ப்பூரில் நடந்து வருகிறது.

இதில் நேற்று நடைபெற்ற இந்தியா லெஜெண்ட்ஸ் அணிக்கு எதிரான போட்டியில் கெவின் பீட்டர்சன் தலைமையிலான இங்கிலாந்து லெஜெண்ட்ஸ் அணி வெற்றிபெற்றது.

ரோட் சேஃப்டி தொடர்

ரோட் சேஃப்டி தொடர்

சாலை பாதுகாப்பு குறித்த விழிப்புணர்வை ஏற்படுத்தும் விதமாக சாலை பாதுகாப்பு டி.20 தொடர் என்ற பெயரில் டி.20 தொடர் இந்தியாவில் நடத்தப்படுகிறது. இதில் கடந்த கொரோனா காரணமாக இந்த தொடர் பாதியில் நிறுத்தப்பட்டது. இந்த நிலையில் நிறுத்தப்பட்ட போட்டிகள் ராய்ப்பூரில் நடந்து வருகிறது. இத்தொடரில் இந்தியா, வெஸ்ட் இண்டீஸ், ஆஸ்திரேலியா, இலங்கை, வங்கதேசம் ஆகிய அணிகளின் முன்னாள் வீரர்கள் கலந்துகொண்டு ஆடுகின்றனர்.

இங்கிலாந்து வெற்றி

இங்கிலாந்து வெற்றி

நேற்று நடைபெற்ற லீக் போட்டியில் இந்தியா - லெஜெண்ட்ஸ் அணிகள் மோதின. இதில் முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து லெஜெண்ட்ஸ் அணியில் கெவின் பீட்டர்சன் தொடக்கம் முதலே அதிரடி காட்டினார். 37 பந்துகளில் 5 சிக்ஸர் உட்பட 75 ரன்கள் சேர்த்து அவுட் ஆனார். அவரை தவிர வேறு யாரு பெரிதாக ரன் அடிக்கவில்லை. இதனால் 20 ஓவர்கள் முடிவில் இங்கிலாந்து அணி 7 விக்கெட்களை இழந்து 188 ரன்கள் சேர்த்தது.

சிறப்பான வெற்றி

சிறப்பான வெற்றி

இதனையடுத்து ஆடிய இந்திய லெஜெண்ட்ஸ் அணியில் சச்சின், சேவாக் ஆகியோர் ஒற்றை இலக்க ரன்கள் மட்டும் சேர்த்து நடையைக் கட்டினர். தொடர்ந்து முகமது கைப், யுவராஜ் சிங், பத்திரிநாத், யூஷப் பதான் போன்றவர்களும் அடுத்தடுத்து ஆட்டமிழந்தார்கள். இதனால், இந்திய அணி 99 ரன்களுக்கு 6 விக்கெட்களை இழந்து தடுமாறியது. அடுத்து களமிறங்கிய 61 ரன்கள் எடுத்தார். இறுதியில் இந்திய அணி 6 ரன்கள் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

குசும்பு

குசும்பு

இதனையடுத்து தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் அணியினருடன் புகைப்படத்தை வெளியிட்டுள்ள கெவின் பீட்டர்சன், இங்கிலாந்தால் இந்தியாவை வெல்ல முடியும் என்றும் இந்தியாவுடனான டி20 தொடருக்கு நாங்கள் தயாராக இருப்பதாகவும் இங்கிலாந்து தேர்வு குழுவுக்கு குறும்புத்தனமாக மெசேஜ் தெரிவித்துள்ளார்.

டி20 போட்டி

டி20 போட்டி

இந்தியாவுக்கு எதிரான டெஸ்ட் தொடரில் இங்கிலாந்து அணி படு தோல்வியடைந்தது. இரு அணிகள் மோதும் டி20 தொடரின் முதல் போட்டி அகமதாபாத்தில் உள்ள நரேந்திர மோடி மைதானத்தில் வரும் மார்ச் 12ம் தேதி நடைபெறவுள்ளது. இதில் டெஸ்ட் தொடரில் பெற்ற தோல்விக்கு பழித்தீர்க்க இங்கிலாந்து அணி போராடும் என எதிர்பார்க்கபடுகிறது.

Story first published: Wednesday, March 10, 2021, 20:23 [IST]
Other articles published on Mar 10, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+