Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இந்திய அணி பேட்டிங் பயிற்சியாளராக நான் வருகிறேன்!கம்பீருடன் இங்கிலாந்து வீரர் இணைந்தால் பட்டாசு தான்

சமீப காலமாக இந்திய கிரிக்கெட் அணியின் பேட்டிங் தடுதறி வருவதால், பல்வேறு தொடரில் தோல்வியை தழுவி தடுமாறி வருகிறது. இதனால், பிசிசிஐ இந்திய அணியின் பேட்டிங் பயிற்சியபளரை நியமிக்க போவதாக செய்திகள் வெளியானது. இது குறித்து அதிகாரப்பூர்வமான அறிவிப்பு எதுவும் வெளியிடப்படவில்லை என்றாலும், அணி நிர்வாகம் மற்றும் பிசிசிஐ இடையேயான உரையாடல்கள் ஆதரவு குழுவை வலுப்படுத்த வேண்டிய அவசியத்தைக் குறிக்கின்றன.

முன்னாள் உள்நாட்டு கிரிக்கெட் நட்சத்திரங்கள் இந்தப் பதவிக்குக் கருதப்படுகிறார்கள், ஆனால் இறுதி முடிவு எதுவும் எடுக்கப்படவில்லை. இங்கிலாந்தின் முன்னாள் கேப்டன் கேவின் பீட்டர்சன், எக்ஸ் தளத்தில், அந்த பொறுப்புக்கு வர தாம் ஆர்வத்துடன் இருப்பதாக பதிலளித்தார். பீட்டர்சன் இந்தியாவின் பேட்டிங் பயிற்சியாளராக இணைந்தால், அவர் தற்போதைய தலைமைப் பயிற்சியாளர் கௌதம் காம்பீருடன் எப்படி ஒத்துழைப்பார் என்பதைப் பார்ப்பது சுவாரஸ்யமாக இருக்கும்.

பீட்டர்சன் மற்றும் காம்பீர் இருவரும் தங்கள் வலுவான ஆளுமைகளுக்கும் வெளிப்படையான தன்மைக்கும் பெயர் பெற்றவர்கள். சுழற்பந்துவீச்சுக்கு சாதகமான மைதானங்களில், வெளிநாட்டு மைதானங்களிலும் பீட்டர்சன் ரன் குவிப்பில் ஈடுபட்டு, பெயர் பெற்றவர். பீட்டர்சன் சர்ச்சைக்குரியவை என்றாலும், அவர் தனது கருத்துக்களை அடிக்கடி தெரிவிக்கிறார், விவாதங்களில் நகைச்சுவை மற்றும் நயவஞ்சகத்தைப் பயன்படுத்துகிறார்.

காம்பீர் நேரடியானவர் மற்றும் தனது மதிப்புகளைப் பற்றிப மிகவும் உற்சாகமாக இருக்கிறார். அவர் தனது நிலைப்பாட்டில் உறுதியாக நிற்கிறார் மற்றும் போட்டியின் போது கூட பீட்டர்சனிடம் மைதானத்தில் பல வாய்மொழி மோதல்களைக் கம்பீர் கொண்டிருக்கிறார். இந்த இரண்டு ஆளுமைகளின் கலவையானது அணிக்கு ஒரு தனித்துவமான ஆற்றலைக் கொண்டு வரக்கூடும்.

இந்தியாவின் தற்போதைய பயிற்சிப் பணியாளர்களில் தலைமைப் பயிற்சியாளர் கௌதம் காம்பீர், பவுலிங் பயிற்சியாளர் மோர்ன் மோர்கல், உதவிப் பயிற்சியாளர்கள் அபிஷேக் நாயர் மற்றும் ரைன் டென் டூஷேட், பேட்டிங் பயிற்சியாளர் டி. திலீப் ஆகியோர் உள்ளனர். ஆஸ்திரேலியா சுற்றுப்பயணத்திற்குப் பிறகு அணியின் செயல்திறன் விமர்சனங்களை எதிர்கொண்டது மற்றும் தொடர்ச்சியான டெஸ்ட் கிரிக்கெட் தோல்விகளை எதிர்கொண்டது.

விராட் கோலி போன்ற நட்சத்திர வீரர்களின் அடிக்கடி ஆப் ஸ்டம்புக்கு வெளியே செல்லும் பந்தை அடித்து ஆட்டமிழந்து வருகிறதார். இதனால், பயிற்சி உத்திகளின் செயல்திறனைப் பற்றிய கேள்விகளை எழுப்பியுள்ளது.பீட்டர்சன் கோலியுடன் பரஸ்பர மரியாதையைப் பகிர்ந்து கொள்கிறார். அவர் அடிக்கடி கோலியை தனது தலைமுறையின் சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவராக பாராட்டியுள்ளார்.

பீட்டர்சன், தொடர்பாக வெளியே விமர்சனங்களை எதிர்கொண்டாலும், சவாலான நேரங்களில் கோலியை ஆதரித்துள்ளார். இதனால், அவர் பேட்டிங் பயிற்சியாளராக வந்தால், கோலியின் பேட்டிங் மேலும் ஜொலிக்கும். பீட்டர்சனின் வருகை இந்திய அணிக்கு பல நன்மையை தரும் . ஆனால் இது கைக்கொடுக்கமா என்பதை பொறுத்து இருந்து பார்க்க வேண்டும்.

Story first published: Thursday, January 16, 2025, 16:29 [IST]
Other articles published on Jan 16, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+