Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வாஹ்ரே வா.. அப்படியே ஜாகீர் கானின் ஜெராக்ஸ்.. கலக்க வரும் "20 ப்யூட்டி" கலீல் அஹமது!

மும்பை : ஆசிய கோப்பைக்கான இந்திய அணியில் இடது கை வேகப் பந்துவீச்சாளரான கலீல் அஹ்மது சேர்க்கப்பட்டுள்ளார். தொடர்ந்து சிறப்பான முறையில் பந்து வீசி வந்த இவர், எதிர்பாராத நேரத்தில் இந்த வாய்ப்பு கிடைத்துள்ளது.

20 வயதே ஆன கலீல், 2023ஆம் ஆண்டு உலகக்கோப்பை தொடருக்கான இந்திய அணியில் இடம் பிடிக்க வேண்டும் என நினைத்து இருந்த நேரத்தில், 2019ஆம் ஆண்டு உலகக்கோப்பையில் ஆடும் வாய்ப்பே கிடைத்து விடும் போல இருக்கிறது.

Khaleel Ahmed selected for Asia cup 2018 and may get a chance in world cup 2019

அணித் தேர்வாளர் பிரசாத் கூறுகையில், "இந்திய அணிக்கு இன்னும் 2-3 பந்துவீச்சாளர்கள் நாங்கள் இன்னும் (2019 உலகக் கோப்பைக்கு) முடிவு செய்யவில்லை. அதில் ஒன்று இடது கை வேகப்பந்துவீச்சாளர் இடம்" என கூறினார்.

கலீல், ராகுல் டிராவிட் வழிகாட்டுதலில், 2016ஆம் ஆண்டு நடைபெற்ற அண்டர் 19 உலகக்கோப்பையில் பங்கேற்றார். அதை தொடர்ந்து ஐபிஎல் டெல்லி அணியில் தன் குருவாக கருதும் ஜாகிர் கானிடம் பந்துவீச்சு நுணுக்கங்களை கற்றார்.

கலீல் கூறும்போது, " நான் கிரிக்கெட் தான் வாழ்க்கை என முடிவெடுத்ததில் இருந்து ஜாகிர் கானை தான் பின்பற்றி வருகிறேன்" என கூறினார். தான் ஆசிய கோப்பைக்கான அழைப்பை எதிர்பார்க்கவில்லை எனவும் கூறினார்.

Story first published: Wednesday, September 5, 2018, 17:28 [IST]
Other articles published on Sep 5, 2018
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+