Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

வார்னருக்கு "பேட்டர்னிட்டி" லீவு... ஆஸி. அணியில் காஜா சேர்ப்பு

பெர்த்: ஆஸ்திரேலிய பேட்ஸ்மேன் டேவிட் வார்னரின் மனைவி பிரசவ தேதி நெருங்கியுள்ளதால் அவர் "பேட்டர்னிட்டி" லீவில் செல்கிறார். இதையடுத்து அவருக்குப் பதில் உஸ்மான் காஜா அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

இந்தியா - ஆஸ்திரேலியா இடையிலான ஒரு நாள் கிரிக்கெட் தொடர் தொடங்கியுள்ளது. முதல் போட்டியில் இந்தியா பிரமாதமாக பேட் செய்தும் கூட ஆஸ்திரேலியாக அதிரடியாக ஆடி வென்று விட்டது.

இன்னும் 4 போட்டிகள் மீதமுள்ளன. இந்த நிலையில் ஆஸ்திரேலிய அணியில் ஒரு மாற்றம் செய்யப்பட்டுள்ளது.

2 போட்டிகளில் வார்னர் கிடையாது

2 போட்டிகளில் வார்னர் கிடையாது

அடுத்து நடைபெறவுள்ள 2வது மற்றும் 3வது போட்டியில் டேவிட் வார்னர் விளையாட மாட்டார் என அறிவிக்கப்பட்டுள்ளது. அவருக்குப் பதில் உஸ்மான் காஜா சேர்க்கப்பட்டுள்ளார்.

விடுப்பில் போவதால்

விடுப்பில் போவதால்

வார்னரின் மனைவிக்கு 2வது குழந்தை பிறக்கவுள்ளது. அவருக்கு பிரசவ தேதி நெருங்கி விட்டது. இதனால் தனது மனைவியுடன் இருப்பதற்காக விடுப்பில் போயுள்ளார் வார்னர். இதனால் அவர் 2 போட்டிகளில் ஆட மாட்டார்.

15 -17

15 -17

15ம் தேதி பிரிஸ்பேன் நகரில் 2வது போட்டி நடைபெறும். 17ம் தேதி மெல்போர்னில் 3வது போட்டி நடைபெறும். இந்த இரு போட்டிகளிலும் வார்னருக்குப் பதில் காஜா விளையாடவுள்ளார்.

மீண்டும் வருவார்

மீண்டும் வருவார்

இதுகுறித்து தேர்வாளர் குழுத் தலைவர் ராட் மார்ஷ் கூறுகையில் வார்னரும், அவரது மனைவி கேன்டிஸும் நலமாக இருக்க வேண்டும் என விரும்புகிறோம். சூழ்நிலையைப் பொறுத்து வார்னர் மீண்டும் அணிக்குத் திரும்பலாம் என்றார் மார்ஷ்.

நல்ல பார்ம்

நல்ல பார்ம்

உஸ்மான் காஜா தற்போது நல்ல பார்மில் உள்ளார். அவர் முதலிலேயே அணிக்குத் தேர்வாகியிருக்க வேண்டும். ஆனால் வாய்ப்பு கிடைக்கவில்லை. இப்போது அவருக்கு நல்ல வாய்ப்பு கிடைத்துள்ளது.

Story first published: Wednesday, January 13, 2016, 14:58 [IST]
Other articles published on Jan 13, 2016
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+