சர்வதேச போட்டிகளில் அதி விரைவாக 7000 ரன்கள்... "கேப்டன்" கோஹ்லியின் சாதனை!
Recommended Video

சர்வதேச போட்டிகளில் விரைவாக 7000 ரன்கள்...கோஹ்லியின் சாதனை!- வீடியோ
எட்பாஸ்டன்: சர்வதேச போட்டிகளில் அதி விரைவாக 7000 ரன்களைக் குவித்த கேப்டன் என்ற பெயரை விராத் கோஹ்லி பெற்றுள்ளார்.
இந்திய அணி இங்கிலாந்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடி வருகிறது. இப்போட்டியில் முதல் இன்னிங்சில் இந்திய கேப்டன் விராட் கோஹ்லி 149 ரன்களை குவித்தார். அவர் 40 ரன்களை எடுத்தபோது சர்வதேச கிரிக்கெட் போட்டி வரலாற்றில் ஒரு புதிய சாதனையை படைத்தார். சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் அதி விரைவாக 7000 ரன்களை குவித்த கேப்டன் என்ற சாதனையை படைத்தார்.

அவர் 105 போட்டிகளில் 124 இன்னிங்ஸ்களில் இந்த சாதனையை படைத்துள்ளார். இந்திய வீரர்களில் கேப்டனாக 7000 ரன்களை கடந்த நான்காவது வீரர் விராட் கோஹ்லி ஆவார். இதற்கு முன்னால் அசாருதீன், கங்குலி மற்றும் தோனி ஆகியோர் இந்திய கேப்டன்களில் 7000 ரன்களை கடந்தவர்கள். அசார் 193 இன்னிங்ஸ்களிலும், கங்குலி 194 இன்னிங்ஸ்களிலும் மற்றும் தோனி 198 இன்னிங்ஸ்களிலும் 7000 ரன்களை கடந்துள்ளனர்.
விராட் கோஹ்லி அதிவிரைவாக 4000,5000,6000 ரன்களை விரைவாக கடந்த கேப்டன் என்ற பெருமையும் கோஹ்லி வசமே உள்ளது. அவர் இந்த ரன்களை முறையே 73,93 மற்றும் 106 இன்னிங்ஸ்களில் எடுத்தது குறிப்பிடத்தக்கது.
இவருக்கு முன்னால் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பிரையன் லாரா 164 இன்னிங்ஸ்களில் 7000 ரன்களை கடந்ததே சாதனையாக இருந்தது. லாராவுக்கு அடுத்த இடத்தில் ரிக்கி பாண்டிங்(165) ,கிளார்க் (166) மற்றும் குக்(171) ஆகியோர் உள்ளனர்.
விராட் கோஹ்லி முதல் இடத்தில் இருந்த லாராவை காட்டிலும் 40 இன்னிங்ஸ்கள் குறைவாக விளையாடி 7000 ரன்களை கடந்தது குறிப்பிடத்தக்கது.
Story first published: Saturday, August 4, 2018, 9:05 [IST]
Other articles published on Aug 4, 2018


Click it and Unblock the Notifications