கோஹ்லி என்னைக் கட்டிக்கோயேன்.. டிவிட்டரில் கெஞ்சிய வீராங்கனை!
லண்டன்: இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் வீராங்கனையான டேணியல் வியாட், இந்திய வீரர் விராத் கோஹ்லிக்கு டிவிட்டர் மூலம் விட்ட காதல் தூது கிரிக்கெட் உலகை கலகலக்க வைத்துள்ளது.
மேரி மீ கோஹ்லி.. என்று டிவிட்டரில் தீக்குச்சியைக் கிழித்துப் போட.. கூடவே பரபரப்பும் தொற்றிக் கொண்டு விட்டது.
ஆனால் அவர் ஏற்கனவே அனுஷ்காவுக்கு புக் ஆகி விட்டார், என்று டேணியலுக்கு பதிலுக்கு டிவிட்டரிலேயே பதில்களும் வந்து குவிந்து வி்ட்டன.
வங்கதேசத்தில் நடந்த உலகக் கோப்பை 20-20 ஓவர் கிரிக்கெட் தொடரின் 2வது அரை இறுதிப் போட்டியில் கோஹ்லி விளையாடிய விதத்தைப் பார்த்து டேணியலுக்கு அவர் மீ்து மையல் பிறந்து விட்டது போலும்.

அனுஷ்காவுடன் ஆட்டம் போடும் கோஹ்லி
கோஹ்லி ஏற்கனவே நடிகை அனுஷ்கா சர்மாவுடன் நட்பாக இருந்து வருகிறார். இருவரும் அடிக்கடி தனிமைக்குள் போய் விடுகிறார்கள். இலங்கை வரை போய் கடற்கரை விசிட்டெல்லாம் அடித்துள்ளனர்.

திடீரென சிக்ஸ் அடித்த டேணியல்
இந்த நிலையில்தான் டேணியல் வியாட், உள்ளே புகுந்து ஒரு சிக்ஸரை அடித்து விட்டுப் போயுள்ளார்.

இங்கிலாந்து மகளிர் அணி
இங்கிலாந்து மகளிர் கிரிக்கெட் அணியின் முக்கிய வீராங்கனைதான் டேணியல். 22 வயதாகும் ஹாட் வீராங்கனையான செம க்யூட்டாம், நகைச்சுவையாக பேசுவதில், உற்சாகமாக இருப்பதில் நம்பர் ஒன்னாம்.

டிவிட்டரில் போட்ட பட்டாசு
இவர் தனது டிவிடட்ர் பக்கத்தில் திடீரென மேரி மீ கோஹ்லி என்று போட்டு வைக்க பரபரப்பாகி விட்டது.

புக் ஆகிப் போச்சே பாப்பா...
ஆனால் உடனே வியாட்டுக்குப் பதில்கள் வந்து விட்டன. விராத் ஏற்கனவே நடிகை அனுஷ்கா சர்மாவுக்கு புக் ஆகி விட்டதாக பதில்கள் வரவே வியாட் ஏமாந்து போய் விட்டாராம்.

இல்லை, அப்படி இருக்காது
வியாட்டுக்கு இதை நம்ப முடியவில்லையாம். உடனே அந்த பதிலுக்கு அவர் அளித்த பதிலில், இல்லை அப்படி இருக்காது என்று பதில் கொடுத்துள்ளார்.

இதிலிந்து கிடைக்கும் நீதி...
நன்றாக ஆடினால் இங்கிலாந்திலிருந்தும் கூட உங்களைத் தேடி புரபோசல்கள் வரும்....!


Click it and Unblock the Notifications