கடைசி ஓவரில் 4 சிக்சர்.. பட்டையை கிளப்பிய குஷ்தில் ஷா.. காப்பாற்றிய முகமது ரிஸ்வான்
துபாய் : ஆசிய கோப்பை கிரிக்கெட் தொடரில் ஹாங்காங்க்கு எதிரான ஆட்டத்தில் 194 ரன்களை இலக்காக பாகிஸ்தான் அணி நிர்ணயித்துள்ளது.
Recommended Video
வாழ்வா சாவா என்ற கட்டத்தில் இரு அணிகளும் களமிறங்கியது. இதில் டாஸ் வென்ற ஹாங்காங் அணி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தது.
இதனையடுத்து பாகிஸ்தான் வீரர் முகமது ரிஸ்வான், கேப்டன் பாபர் அசாம் தொடக்க வீரராக களமிறங்கினர்.

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட கேப்டன் பாபர் அசாம் 9 ரன்கள் மட்டுமே எடுத்த நிலையில் ஆட்டமிழந்தார். இதனையடுத்து ரிஸ்வான் ஃபகர் ஷமான் ஜோடி பொறுப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியின் ஸ்கோரை உயர்த்தினர். பாகிஸ்தான் அணி 10 ஓவரில் 64 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதன் பிறகு தான் பாகிஸ்தான் தங்களத அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி ஹாங்காங்க்கு அதிர்ச்சி அளித்தனர்.
ஃபகர் சமான் 41 பந்துகளை எதிர்கொண்ட 53 ரன்கள் சேர்த்து ஆட்டமிழந்தார். இதன் பிறக ஜோடி சேர்ந்த குஷ்தில் ஷா முதலில் பொறுமையாக ஆடினார். மறுபுறும் ரிஸ்வான் தனது ஸ்ட்ரைக் ரேட்டை அதிகபடுத்தும முயற்சியில் ஈடுபட்டார். 57 பந்துகளில் ரிஸ்வான் 78 ரன்கள் சேர்த்தார். இதில் 6 பவுண்டரிகளும்,ஒரு சிக்சரும் அடங்கும்.
மறுமுனையில் குஷ்தில் ஷா, கடைசி ஓவரில் ருத்ரதாண்டவம் ஆடினார். இதில் வரிசையாக 4 இமாலய சிக்சர் மற்றும் ஓயிடு பாலில் 4 ரன்கள் என கடைசி ஓவரில் பாகிஸ்தான் 29 ரன்கள் சேர்த்தது. இதன் மூலம், பாகிஸ்தான் அணி 20 ஓவர் முடிவில் 2 விக்கெட் இழப்பிற்கு 193 ரன்கள் எடுத்துள்ளது.


Click it and Unblock the Notifications