Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

டயாப்பர் மாட்டிக் கொண்டு.. என்ன ஷாட்.. யாருப்பா இது? கோலியை அசர வைத்த குட்டிப் பையன்!

மும்பை : கடந்த ஐந்து மாதங்களுக்கு முன் இங்கிலாந்து அணியின் முன்னாள் வீரர் கெவின் பீட்டர்சன் இரண்டு வயது சிறுவன் ஒருவனின் பேட்டிங் வீடியோவை பகிர்ந்து இருந்தார்.

Recommended Video

Kid playing cricket shots is trending in twitter.

நேர்த்தியாக ஷாட் அடிக்கும் அந்த வீடியோவை கண்ட விராட் கோலி தன் வியப்பை பதிவு செய்து இருந்தார்.

அந்த குட்டிப் பையன் இப்போது மூன்று வயதான நிலையில், தன் கிரிக்கெட் பயிற்சியை தொடர்ந்து வருகிறார். அவரது அடுத்த வீடியோ வெளியாகி மேலும் வியப்பை ஏற்படுத்தி உள்ளது.

இந்தியாவில் கிரிக்கெட்

இந்தியாவில் கிரிக்கெட்

இந்தியாவில் கிரிக்கெட் என்பது கோடிக்கணக்கான ரசிகர்களின் வாழ்க்கையில் ஒரு அங்கமாக மாறி விட்டது என்றே சொல்லலாம். அதன் விளைவு, குழந்தைகள் கூட கிரிக்கெட் விளையாட்டில் மிகச் சிறிய வயதிலேயே காலடி எடுத்து வைக்கின்றனர்.

நேர்த்தியான ஷாட்

நேர்த்தியான ஷாட்

ஆனால், இரண்டு வயதில் நேர்த்தியான ஷாட் அடிப்பதெல்லாம் நம்ப முடியாத விஷயம் தான். ஷாஹித் என்ற இந்த சிறுவன் பேட்டிங் செய்யும் வீடியோ சமூக வலைதளத்தில் கடந்த ஐந்து மாதங்கள் முன்பு வெளியானது. பல ரசிகர்களால் பாராட்டப்பட்டது.

என்ன காரணம்?

என்ன காரணம்?

அதற்கு காரணம் இங்கிலாந்து வீரர் கெவின் பீட்டர்சன் அதை பகிர்ந்ததும், அந்த வீடியோவை பார்த்து இந்திய அணி கேப்டன் விராட் கோலி ஆச்சரியப்பட்டதும் தான். தற்போது அந்த சிறுவன் இன்னும் ஒரு படி முன்னேறி இருக்கிறான்.

பயிற்சி

சமீபத்தில் ஷாஹித்தின் அடுத்த வீடியோ வெளியாகி அதுவும் செய்தியாக மாறி உள்ளது. இந்த முறை டயாப்பர்-இல் இருந்து டிரவுசருக்கு முன்னேறி இருப்பதோடு, பிளாஸ்டிக் பாட்டில் வைத்து ஸ்ட்ரைட் டிரைவ் அடிப்பது என பயிற்சியிலும் முன்னேறி இருக்கிறான்.

லாக்டவுன் என்பதால்..

லாக்டவுன் என்பதால்..

தற்போது லாக்டவுன் என்பதால் வீட்டுகுள்ளேயே பயிற்சி செய்து வருகிறார். தற்போது மூன்று வயது ஆகிறது, இப்போதே ஸ்ட்ரைட் டிரைவ் அடிப்பதில் ஆர்வம் செலுத்தி வரும் அவருக்கு பிடித்த வீரர், ரோல் மாடல் சச்சின் தானாம்.

Story first published: Sunday, May 17, 2020, 21:34 [IST]
Other articles published on May 17, 2020
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+