Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

"ஸாரி யுனிவர்ஸ் பாஸ்".. செஞ்சுரி அடித்துவிட்டு கெய்லிடம் மன்னிப்பு கேட்ட பொல்லார்ட்.. உலக சாதனை

நியூயார்க்: டி20 கிரிக்கெட் வரலாற்றில் அதிக ரன்கள் குவித்த வீரர் என்ற கிறிஸ் கெய்லின் 12 ஆண்டு கால சாதனையை முறியடித்து, வெஸ்ட் இண்டீஸ் முன்னாள் ஆல்-ரவுண்டர் கீரான் பொல்லார்ட் புதிய உலக சாதனை படைத்துள்ளார். இதற்காக கெய்லிடம் அவர் மன்னிப்பும் கேட்டுள்ளார்.

அமெரிக்காவில் நடைபெற்று வரும் மேஜர் லீக் கிரிக்கெட் 2026 தொடரில், வாஷிங்டன் ஃப்ரீடம் அணிக்கு எதிரான போட்டியில் எம்ஐ நியூயார்க் அணிக்காக விளையாடிய பொல்லார்ட், 56 பந்துகளில் ஆட்டமிழக்காமல் 100 ரன்கள் குவித்து அசத்தினார். இப்போட்டியின் போது அவர் 81 ரன்களைக் கடந்தபோது, டி20 கிரிக்கெட்டில் அதிக ரன்கள் எடுத்த வீரர் என்ற கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடித்தார். 39 வயதான பொல்லார்ட் இதுவரை 736 டி20 போட்டிகளில் விளையாடி 14,582 ரன்கள் குவித்துள்ளார். கெய்ல் 14,562 ரன்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

Kieron Pollard asks Sorry to Chris Gayle after breaking his 12-Year T20 Runs Record with Century in MLC 2026 Match

இந்த வரலாற்றுச் சாதனைக்குப் பிறகு பேசிய பொல்லார்ட், "நாங்கள் எப்போதுமே வியந்து பார்க்கும் கிறிஸ் கெய்லின் சாதனையை முறியடித்தது மிகவும் சிறப்பு வாய்ந்தது. எனவே, என்னை மன்னித்துவிடுங்கள் யுனிவர்ஸ் பாஸ், ஆனால் நாம் இருவருமே இப்போது உச்சத்தில் இருக்கிறோம்" என்று ஜாலியாகக் கூறினார்.

மேலும், "6 அல்லது 7வது வரிசையில் பேட்டிங் செய்வது மிகவும் கடினமானது. பலரும் முன்னிலையில் விளையாட ஆசைப்படும் போது, யாராவது ஒருவர் பின்வரிசையில் வந்து போட்டியை முடிக்க வேண்டிய கடினமான வேலையைச் செய்ய வேண்டும். அதை நான் சவாலாக ஏற்றுக்கொண்டேன்" என்றார்.
முன்னதாக, பொல்லார்ட், கெய்ல், பிராவோ போன்ற வீரர்கள் சர்வதேச போட்டிகளை விட உலகெங்கிலும் உள்ள டி20 லீக் போட்டிகளுக்கு முக்கியத்துவம் தருவதாக கடுமையான விமர்சனங்கள் எழுந்தன.

சதம் அடித்தும் பலனில்லை.. ஐசிசி விதியை மீறிய ஆப்கானிஸ்தான் கேப்டன் ஷாஹிதிக்கு தண்டனை

சதம் அடித்தும் பலனில்லை.. ஐசிசி விதியை மீறிய ஆப்கானிஸ்தான் கேப்டன் ஷாஹிதிக்கு தண்டனை

இது குறித்துப் பேசிய பொல்லார்ட், "தொழில்நுட்பத்தைப் போலவே கிரிக்கெட்டும் மாறிக்கொண்டே இருக்கிறது. தற்போது கிரிக்கெட் என்பது வெறும் விளையாட்டு மட்டுமல்ல, அது ஒரு தொழில். எங்களை விமர்சித்தவர்கள் அனைவரும் இப்போது அமைதியாக அமர்ந்து எங்கள் சாதனைகளைக் கொண்டாடுவார்கள் என நம்புகிறேன்" என்று பதில் அளித்தார்.

Story first published: Monday, June 22, 2026, 14:37 [IST]
Other articles published on Jun 22, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+