Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

உலகில் யாருமே செய்யாத சாதனை.. டி20 போட்டியில் பொலார்ட் 700*.. பக்கத்தில் கூட யாரும் இல்ல

டல்லாஸ்: அமெரிக்காவில் நடைபெற்று வரும் எம்.எல்.சி தொடரில் எம்ஐ நியூயார்க் அணி சார்பாக விளையாடிய கிரண் பொலார்ட் ஒரு மாபெரும் சாதனையை படைத்திருக்கிறார். மேஜர் லீக் கிரிக்கெட் தொடரில் இம்முறை மும்பை அணியின் எம்ஐ நியூயார்க் மிகவும் மோசமாக விளையாடி வருகிறது.

சான்பிரான்சிஸ்கோ அணிக்கு எதிரான இன்றைய ஆட்டத்தில் முதலில் மும்பை அணி பந்து வீசியது. இதில் சான்பிரான்சிஸ்கோ அணி 20 ஓவர் முடிவில் நான்கு விக்கெட் இழப்பிற்கு 246 ரன்கள் எடுத்தது.மேத்தீவ் ஷார்ட் 43 பந்துகளில் 91 ரன்களும், 26 பந்துகளில் 64 ரன்களும் குவித்தனர்.

Kieron Pollard

இதனை அடுத்து 247 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் எம்ஐ நியூயார்க் அணி களமிறங்கியது. இதில் தொடக்க வீரர் 46 பந்துகளில் 70 ரன்கள் மோனான்க் பட்டேல் 33 பந்துகளில் 60 ரன்களும் எடுத்தனர்.பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட பொலார்ட் மூன்று பவுண்டரி, இரண்டு சிக்சர் என 16 பந்துகளில் 34 ரன்கள் எடுத்தார்.

எனினும் மற்ற வீரர்கள் சொற்ப ரன்களில் ஆட்டம் இழந்ததால் எம்ஐ நியூயார்க் அணி 20 ஓவர் முடிவில் ஆறு விக்கெட் இழப்பிற்கு 199 ரன்கள் தான் எடுத்தது. இந்த நிலையில் டி20 வரலாற்றிலேயே அதிக போட்டிகள் களமிறங்கிய வீரர் என்ற சாதனையை பொலார்ட் படைத்திருக்கிறார். இதுவரை பொலார்ட் 700 டி20 போட்டிகளில் உலகம் முழுவதும் விளையாடி இருக்கிறார்.

இந்த பட்டியலில் இரண்டாவது இடத்தில் பிராவோ இருக்கின்றார். அவர் 582 டி20 போட்டிகளில் விளையாடி உள்ளார்.மூன்றாவது இடத்தில் பாகிஸ்தான் வீரர் சோயிப் மாலிக் இருக்கின்றார். அவர் 557 போட்டிகள் விளையாடி இருக்கின்றார். நான்காம் இடத்தில் வெஸ்ட் இண்டீஸ் வீரர் ஆண்டிரூ ரஸில் 556 போட்டிகள் உள்ளார்.
ஐந்தாவது இடத்தில் சுனில் நரைன் 551 போட்டியுடன் உள்ளார்ம் இந்த பட்டியலில் முதல் 10 இடத்தில் கூட எந்த ஒரு இந்திய வீரரும் இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Tuesday, June 24, 2025, 17:28 [IST]
Other articles published on Jun 24, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+