Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

KXIP vs DC : ஆரம்பமே சொதப்பல்... எங்கிட்டு போய் ரன் அடிக்கிறது..?

சண்டிகர்:டெல்லி அணிக்கு எதிரான போட்டியில் பஞ்சாப் அணி தொடக்க விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

சண்டிகரில் நடைபெறும் ஐபிஎல் தொடர் 13வது போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் கேப்டன் ஷ்ரேயஸ் அய்யர், டாஸ் வென்று முதலில் பஞ்சாப் அணியை பேட் செய்ய அழைத்தார்.

பஞ்சாப் அணியில் அதிர்ச்சிகரமாக கிறிஸ் கெய்ல் இல்லை, அதே போல் பவுலர் ஆண்ட்ரூ டையும் இல்லை. டெல்லி கேப்பிடல்ஸ் அணி அமித் மிஸ்ராவுக்கு பதில் அவேஷ் கான் என்பவரை அணியில் சேர்த்துள்ளது.

வீரர்கள் யார்?

வீரர்கள் யார்?

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வீரர்கள்: ராகுல், மயங்க் அகர்வால், டேவிட் மில்லர், சர்பராஸ் கான், மந்தீப் சிங், சாம் கரன், அஸ்வின், விலோயன், முஜீப் உர் ரஹ்மான், முருகன் அஸ்வின், முகமது சமி

அணி விவரம்

அணி விவரம்

டெல்லி கேப்பிடல்ஸ் அணி வீரர்கள்:பிரித்வி ஷா, ஷிகர் தவண், ஷ்ரேயஸ் அய்யர், கொலின் இங்ரம், ரிஷப் பந்த், ஹனுமா விஹாரி, கிறிஸ் மோரிஸ், ஹர்ஷல் படேல், அவேஷ் கான், சந்தீப் லாமிச்சான், ரபாடா.

ராகுல்,அகர்வால்

ராகுல்,அகர்வால்

இதையடுத்து, பஞ்சாப் அணி முதலில் களமிறங்கியது. வெற்றி பெற்று புள்ளிகள் பட்டியலில் முன்னேற வேண்டிய கட்டாயம் என்பதால் பஞ்சாப்புக்கு நெருக்கடி காலம் என்று கூறலாம். தொடக்க வீரர்களாக ராகுலும், மயங்க் அகர்வாலும் களம் இறங்கினர்.

சொதப்பல் ஆட்டம்

சொதப்பல் ஆட்டம்

பெரிதும் எதிர்பார்க்கப்பட்ட இந்த ஜோடி தொடக்கி வைத்த சொதப்பல்... அடுத்து வந்த வீரர்களையும் பாடாய்படுத்தியது. அணியின் ஸ்கோர் 15 ரன்களாக இருந்த போது ராகுல் மோரிஸ் பந்தில் எல்பிடபிள்யூ முறையில் ஆட்டமிழந்தார்.

நிலைக்காத ஜோடி

நிலைக்காத ஜோடி

அதன்பிறகு.. கர்ரன் அகர்வாலுடன் கைகோர்த்தார். ஆனால் நீண்ட நேரம் இந்த ஜோடி நிலைக்கவில்லை. ஸ்கோர் 36 என்றிருந்த போது, கர்ர்ன் வெளியேறினார். அப்போது சர்பிராஸ் கான் அடுத்த பேட்ஸ்மெனாக உள்ளே வந்தார்.

3 விக். இழப்பு

3 விக். இழப்பு

தடுமாறிக் கொண்டிருந்த அகர்வாலும் நடையை கட்ட 7 ஓவர்களில் 58 ரன்களை மட்டுமே எடுத்து 3 விக்கெட்டுகளையும் பறிகொடுத்தது பஞ்சாப். வெற்றி பெற்றால் புள்ளி பட்டியலில் முன்னேறலாம் என்ற கட்டத்தில் உள்ள பஞ்சாப் அணி சொதப்பியது, ரசிகர்களுக்கு பெருத்த ஏமாற்றத்தை அளித்துள்ளது. அதிரடியாக ஆடி ரன்களை உயர்த்த வேண்டும் என்று ரசிகர்கள் எதிர்பார்த்துள்ளனர்.

Story first published: Monday, April 1, 2019, 21:11 [IST]
Other articles published on Apr 1, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+