பிராக்டீஸ்ல இறங்கிய கிங் கோலி... சிங்கம் களமிறங்கிடுச்சுங்கோ... களத்துல சந்திப்போம்!
சென்னை : இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான டெஸ்ட் தொடர் வரும் 5ம் தேதி முதல் போட்டியுடன் சென்னையில் துவங்கவுள்ளது.
இதையொட்டி தங்களது குவாரன்டைனை முடித்துக் கொண்டு நேற்று முதல் பயிற்சிகளில் இந்திய அணி வீரர்கள் ஈடுபட்டு வருகின்றனர்.
இன்றைய தினம் நெட் பயிற்சியில் ஈடுபட்டுள்ளனர். இந்த பயிற்சியில் கேப்டன் விராட் கோலியும் மிகவும் தீவிரத்துடன் ஈடுபட்டுள்ளார்.

பயிற்சிகளில் வீரர்கள்
இந்தியா மற்றும் ஆஸ்திரேலியா இடையிலான 4 போட்டிகளை கொண்ட டெஸ்ட் தொடரின் முதல் 2 போட்டிகள் சென்னையில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளன. இதன் முதல் போட்டி வரும் 5ம் தேதி சென்னை சிதம்பரம் மைதானத்தில் துவங்கி நடைபெறவுள்ளது. இதையொட்டி இந்தியா மற்றும் இங்கிலாந்து வீரர்கள் பயிற்சிகளில் ஈடுபட்டுள்ளனர்.

விராட் கோலி தீவிர பயிற்சி
முன்னதாக இரு அணிகளை சேர்ந்த வீரர்களும் தங்களது 6 நாட்கள் குவாரன்டைனை முடித்துக் கொண்டு நேற்று முதல் பயிற்சி போட்டிகளில் பங்கேற்றனர். கடந்த ஆஸ்திரேலியாவிற்கு எதிரான இறுதி 3 டெஸ்ட் போட்டிகளில் பங்கேற்காமல் தனது குழந்தை பிறப்பிற்காக நாடு திரும்பிய கேப்டன் விராட் கோலியும் இதில் தீவிரமாக பங்கேற்றார்.

புகைப்படம் பகிர்வு
இந்நிலையில் இந்த புகைப்படத்தை கோலி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். இதில் மற்ற வீரர்களுடன் இணைந்து அவர் மிகவும் தீவிரமாக பயிற்சி செய்வது அந்த புகைப்படத்தில் தெரிகிறது. இதன்மூலம் கிங் கோலி மீண்டும் களத்தில் இறங்கியுள்ளது தெரிகிறது.

ரசிகர்களை அனுமதிக்க திட்டம்
இந்தியா மற்றும் இங்கிலாந்து இடையிலான இந்த தொடரின் முதல் இரண்டு போட்டிகள் வரும் 5 மற்றும் 13 ஆகிய தேததிகளில் அடுத்தடுத்து நடைபறெவுள்ளது. இரண்டாவது போட்டியில் ரசிகர்களை அனுமதிக்க பிசிசிஐ மற்றும் தமிழ்நாடு கிரிக்கெட் சங்கம் நடவடிக்கை மேற்கொண்டுள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications