For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

சாம்பியன்ஸ் லீக்கில் இன்று பார்படோஸ் அணியுடன் பஞ்சாப் மோதல்.. விளாசுவாரா வீரேந்திர சேவாக்?

By Veera Kumar

மொஹாலி: முதல் போட்டியிலேயே முத்திரை பதித்த கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி இன்று மேற்கிந்திய தீவுகளின் பார்படோஸ் டிரிடென்ட்ஸ் அணியுடன் மோதுகிறது.

சாம்பியன்ஸ் லீக்கில் கடந்த வியாழக்கிழமை நடந்த போட்டியில் ஹோபர்ட் ஹரிகேன்ஸ் அணியை ஐந்து விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி அசத்தியது பஞ்சாப். இந்நிலையில் அதே மொஹாலி மைதானத்தில் இன்று இரவு 8 மணிக்கு தொடங்கும் போட்டியில், மேற்கிந்திய தீவுகளின் பார்படோஸ் டிரிடென்ட்ஸ் அணியுடன் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி மோதுகிறது.

சேவாக் முட்டை

சேவாக் முட்டை

முதல் போட்டியில் பஞ்சாப் அணியின் டாப்-ஆர்டர் மிகவும் மோசமான பேட்டிங்கை காண்பித்தது. வீரேந்திர சேவாக் முதல் பந்திலேயே முட்டை போட்டார், டேவிட் மில்லரும் டக் அவுட் ஆகி ஏமாற்றினார்.

மேக்ஸ்வெல் அபாரம்

மேக்ஸ்வெல் அபாரம்

கிளென் மேக்ஸ்வெல் மற்றும் கேப்டன் ஜார்ஜ் பெய்லி ஆகியோர் கணிசமாக ரன் அடித்து தங்கள் அணியை 2 ஓவர் மிச்சம் இருக்கும்போதே வெற்றி பெறச் செய்தனர். அவர்களும் சொதப்பியிருந்தால் அன்று போட்டி பஞ்சாப் கைவிட்டு போயிருக்கும்.

போலார்ட் மிஸ்சிங்

போலார்ட் மிஸ்சிங்

வெஸ்ட் இன்டீசின், பார்படோஸ் டிரிடென்ட்ஸ் அணியை பொறுத்தளவில் கரீபியன் பிரிமீயர் லீக் போட்டித் தொடரில் பட்டம் வென்ற உற்சாகத்தில் இந்தியா வந்துள்ளது. இருப்பினும் அந்த அணியின் முன்னணி வீரர்கள் கிரன் பொல்லார்ட், ட்வைன் ஸ்மித், சோயிப் மாலிக் ஆகியோர் இல்லாதது அந்த அணிக்கு பலவீனமே. ஏனெனில் இந்த வீரர்கள் வேறு அணிகளுடன் ஆட ஒப்பந்தமாகியுள்ளனர்.

முக்கிய வீரர்கள்

முக்கிய வீரர்கள்

பார்படோஸ் டிரிடென்ட்ஸ் அணியில் ஜேம்ஸ் பிரான்க்ளின், நீல் மெக்கன்சி, எல்டன் சிகும்புரா, ஜீவன் மென்டிஸ், தில்ஷான் முனாவீரா மற்றும் ரவி ராம்பால் ஆகியோர் முக்கியமான வீரர்களாகும்.

சேவாக் சாதிப்பாரா?

சேவாக் சாதிப்பாரா?

பஞ்சாப் அணியில் கரன்வீர்சிங், அக்ஷர் பட்டேல், திசாரா பெரேரா ஆகியோர் பவுலிங்கிலும், சேவாக், மேக்ஸ்வெல், பெய்லி ஆகியோர் பேட்டிங்கிலும் சாதிப்பார்கள் என்று எதிர்பார்க்கலாம்.

மற்றொரு போட்டி

மற்றொரு போட்டி

இதனிடையே மற்றொரு போட்டியில் தென் ஆப்பிரிக்காவின் டால்பின்ஸ் அணியும், ஆஸ்திரேலியாவின் பெர்த் ஸ்கார்ச்சர்ஸ் அணியும் இன்று மாலை 4 மணிக்கு தொடங்கும் போட்டியில் மொஹாலியில் மோதுகின்றன.

Story first published: Saturday, September 20, 2014, 17:28 [IST]
Other articles published on Sep 20, 2014
English summary
After launching their campaign on a winning note, IPL finalists Kings XI Punjab will look to dish out another dominating performance when they face the formidable Barbados Tridents in a Group B match of the Champions League twenty20 in Mohali on Saturday.
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+