For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

அதிர வைக்கும் அந்த முடிவு.. அஸ்வின் இமேஜை மொத்தமாக காலி செய்த கிங்ஸ் லெவன் பஞ்சாப்!

Recommended Video

Ashwin may removed as captain From KXIP

மொஹாலி : ஐபிஎல் அணியான கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் கேப்டன் பதவியில் இருந்து அஸ்வின் நீக்கப்பட்டதாக செய்திகள் வெளியானது.

இந்த நிலையில், அவரை ஒட்டு மொத்தமாக அணியில் இருந்தே நீக்க உள்ளதாகவும், வேறு அணிக்கு தள்ளி விட முடிவு செய்துள்ளதாகவும் அதிர வைக்கும் தகவல் வெளியாகி உள்ளது.

இதன் பின்னணி குறித்தும், அடுத்து என்ன நடக்கப் போகிறது என்பது குறித்த தகவல்கள் வெளியாகி உள்ளன. வெஸ்ட் இண்டீஸ் தொடரிலும் அணியில் வாய்ப்பை இழந்த அஸ்வின், ஐபிஎல்-இலும் பின்னடைவை சந்தித்து இருக்கிறார்.

2 ஆண்டுகள் கேப்டன்

2 ஆண்டுகள் கேப்டன்

கடந்த இரு ஆண்டுகளாக அஸ்வின் கேப்டன்சியில் செயல்பட்டு வந்தது கிங்ஸ் லெவன் பஞ்சாப். கேப்டனாக அஸ்வின் புதிய முயற்சிகளை எடுத்தார், இருந்தாலும் அந்த அணி வெற்றிகளை குவிக்கவில்லை. அவரது சில முயற்சிகள் பாராட்டப்பட்டது.

பெரிய வெற்றிகள் இல்லை

பெரிய வெற்றிகள் இல்லை

அனாலும், 2018 ஐபிஎல் தொடரில் ஏழாம் இடமும், 2019 ஐபிஎல் தொடரில் ஆறாம் இடமும் மட்டுமே பிடித்தது பஞ்சாப் அணி. அதனால், உரிமையாளர்கள் பெரிய மாற்றத்தை எதிர்பார்த்து சில முடிவுகளை செய்தனர்.

கேப்டன் பதவி

கேப்டன் பதவி

பயிற்சியாளர் பதவியில் இருந்து மைக் ஹெஸ்ஸனை நீக்கிய அந்த அணி, அடுத்து கேப்டன் பதவியில் இருந்து அஸ்வினை நீக்கப் போவதாக சில தகவல்கள் தெரிவித்தன. அது உண்மை தான் என அந்த அணியை சேர்ந்த சிலர் கூறி உள்ளனர்.

அடுத்தடுத்த பின்னடைவு

அடுத்தடுத்த பின்னடைவு

தற்போது வெஸ்ட் இண்டீஸ் தொடரில் நல்ல பார்மில் இருக்கும் அஸ்வினுக்கு அணியில் இடம் கிடைக்கவில்லை. அதுவே பெரிய பாதிப்பு என்ற நிலையில், கேப்டன் பதவியும் பறிக்கப்பட்டது. இது அவரது இமேஜை பாதிக்கும் என கருதப்பட்டது.

அணியில் இல்லை

அணியில் இல்லை

அதை விட மோசமாக அவரை அணியில் இருந்தே நீக்க உள்ளது பஞ்சாப் அணி. 7.6 கோடி ரூபாய்க்கு அஸ்வின் ஏலத்தில் வாங்கப்பட்டார். ஐபிஎல் விதிப்படி அதே விலைக்கு அவரை வேறு அணிக்கு விற்க முடியும். அதற்கான பேச்சு வார்த்தைகளில் ஈடுபட்டுள்ளது பஞ்சாப் அணி.

வாங்கப் போவது யார்?

வாங்கப் போவது யார்?

அஸ்வினை வாங்க டெல்லி கேபிடல்ஸ் அணியும், ராஜஸ்தான் ராயல்ஸ் அணியும் விருப்பம் தெரிவித்து இருப்பதாக கூறப்படுகிறது. அப்படி அஸ்வின் வேறு அணிக்கு சென்றாலும் அவரால் கேப்டனாக இருக்க முடியாது.

அடுத்த கேப்டன் யார்?

அடுத்த கேப்டன் யார்?

கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி அடுத்த கேப்டனாக இந்திய அணியில் தற்போது துவக்க வீரராக ஆடி வரும் ராகுலை நியமிக்க உள்ளதாக சில தகவல்கள் தெரிவிக்கின்றன.

Story first published: Monday, August 26, 2019, 11:49 [IST]
Other articles published on Aug 26, 2019
English summary
Kings XI Punjab decided to transfer Ashwin to other teams after removed him as captain
உடனடி நியூஸ் அப்டேட்டுகள்
Enable
x
Notification Settings X
Time Settings
Done
Clear Notification X
Do you want to clear all the notifications from your inbox?
Yes No
Settings X