Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

சந்தீப் சர்மாவைப் போட்டு இப்படியா 'அடிப்பார்கள்' இந்த சன்ரைசர்ஸ்......?

ஹைதராபாத்: 7வது ஐபிஎல் தொடரில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியின் மிகச் சிறப்பான, வெற்றிகரமான பந்து வீச்சாளராக வலம் வரும் சந்தீப் சர்மாவுக்கு நேற்று ஹைதராபாத் வீரர்கள் ஷாக் ட்ரீட்மென்ட் கொடுத்து விட்டனர்.

சந்தீப்பின் பந்துகளை நாலாபுறமும் சிதறடித்து அவரை நோகச் செய்து விட்டனர்.

அடியென்றால் அப்படி ஒரு அடி.. 4 ஓவர்களை வீசிய சர்மா, 65 ரன்களை வாரிக் கொடுத்து வதங்கிப் போய் விட்டார்.

வரலாற்றிலேயே 2வது மோசமான பந்து வீச்சு

வரலாற்றிலேயே 2வது மோசமான பந்து வீச்சு

சந்தீப்பின் நேற்றைய பந்து வீச்சு, ஐபிஎல் வரலாற்றிலேயே 2வது மோசமான பந்து வீச்சு என்ற பெயரைப் பெற்று விட்டது.

இதுவரை 13 விக்கெட்கள்

இதுவரை 13 விக்கெட்கள்

சந்தீப் சர்மா இதுவரை 13 விக்கெட்களை நடப்புத் தொடரில் வீழ்த்த்தியுள்ளார். இந்தப் போட்டிக்கு வருவதற்கு முன்பு வரை அவரது பந்தை அடிக்க எதிரணியினர் நடுங்கும் நிலையில்தான் இருந்தது. ஆனால் நேற்று நிலைமை தலைகீழாகி விட்டது.

அடி அடியென்று அடித்து துவம்சம் செய்த ஹைதராபாத்

அடி அடியென்று அடித்து துவம்சம் செய்த ஹைதராபாத்

நேற்று சந்தீப் சர்மாவின் பந்துகளை அடி அடியென்று அடித்து துவம்சம் செய்து விட்டனர் ஹைதராபாத் வீரர்கள். ஒரு விக்கெட்டை மட்டுமே வீழ்த்திய சர்மா, 4 ஓவர்கள் பந்து வீசி 65 ரன்களை வாரிக் கொடுத்து விட்டார்.

இதற்கு முன்பு உமேஷ் யாதவ்

இதற்கு முன்பு உமேஷ் யாதவ்

இதற்கு முன்பு கடந்த ஆண்டு தொடரின்போது டெல்லி டேர்டெவில்ஸ் வீரர் உமேஷ் யாதவின் பந்து வீச்சை இப்படித்தான் பெங்களூர் வீரர்கள் அடித்துப் பிரித்து விட்டனர். அதற்கு அடுத்து மோசமான பந்து வீச்சாக சர்மாவின் பந்து வீச்சு அமைந்துள்ளது.

ஓஜாதான் ரொம்ப மோசமப்பா...

ஓஜாதான் ரொம்ப மோசமப்பா...

ஹைதராபாத் வீரர்களில் நமன் ஓஜாதான் மோசமாக அடித்து விட்டார். 5 பந்துகளில் அவர் 23 ரன்களைக் குவித்தார். அதில் 2 சிக்ஸர்கள், 2 பவுண்டரிகள், ஒரு மூன்று ரன்னும் அடக்கம். ஸ்டிரைக் ரேட் 460 ஆக இருந்தது. சர்மா.. பாவம் நொந்தே போய் விட்டார்.

கடைசி ஓவரில் 26 ரன்கள்

கடைசி ஓவரில் 26 ரன்கள்

சர்மா தனது கடைசி ஓவரை 19வது ஓவரில் வீசினார். அதிலும் நமன் ஓஜா விளையாடி விட்டார். இந்த முறை 26 ரன்கள் அந்த ஓவரில் வந்தது. இந்த ஓவரில்தான் சர்மாவுக்கு ஒரு விக்கெட்டும் கிடைத்தது.

நம்பர் ஒன் இஷாந்த் சர்மா...

நம்பர் ஒன் இஷாந்த் சர்மா...

ஐபிஎல் வரலாற்றில் அதிக அளவிலான ரன்களை வி்ட்டுக் கொடுத்தவராக இஷாந்த் சர்மாதான் உள்ளார். அவர் விக்கெட்டே எடுக்காமல் 66 ரன்களை கடந்த ஆண்டு சென்னைக்கு எதிரான போட்டியில் கொடுத்தார்.

Story first published: Thursday, May 15, 2014, 12:26 [IST]
Other articles published on May 15, 2014
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+