DC vs KXIP: அமர்க்கள ஆரம்பம்.. அப்புறம் தடுமாறி 163 ரன்கள் குவித்த பஞ்சாப் .. கெயில் 69
டெல்லி:ஐபிஎல் தொடரில் டெல்லிக்கு எதிரான ஆட்டத்தில் தொடக்கத்தில் அருமையாக ஆடிய பஞ்சாப் பின்னர் தட்டு தடுமாறி 163 ரன்களை சேர்த்தது.
ஐபிஎல் தொடரில் 37வது போட்டியான இன்றைய போட்டியில் டெல்லி கேப்பிடல்ஸ் அணியும், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும் மோதின. டெல்லி பெரோஷா கோட்லா மைதானத்தில் தொடங்கிய இப்போட்டியில் டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல்ஸ் அணி கேப்டன் ஸ்ரேயஸ் அய்யர் முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.
இதையடுத்து முதலில் பஞ்சாப் அணி களம் இறங்கியது. தொடக்க வீரர்களாக ராகுலும், கெயிலும் களம் கண்டனர். வழக்கம் போல அதிரடியை காட்டினார் கெய்ல். பந்துகளை பவுண்டரிகளுக்கும், சிக்சர்களுக்கும் விரட்டினார்.

ராகுல், அகர்வால் அவுட்
மறுபுறமோ... ராகுல் 12 ரன்களில் லமிச்சானே பந்தில் ஆட்டமிழந்தார். கெயிலுடன் மயங்க் அகர்வால் களம் கண்டார். ஆனால் அவரும் 2 ரன்களில் வெளியேறினார்.

2 விக்கெட்டுகள் காலி
50 ரன்களை எடுப்பதற்குள் பஞ்சாப் அணி 2 முக்கிய விக்கெட்டுகளை இழந்தது. விக்கெட்டுகளை இழந்தாலும் கவலையில்லாமல் கெயில் வழக்கம் போல் டெல்லி பந்துவீச்சை துவம்சம் செய்தார்.

வீழ்ந்தார் மில்லர்
வெகு விரைவில் அரை சதத்தை எட்டிய கெயிலை ஆட்டமிழக்க டெல்லி அணியினர் முயற்சி செய்தனர். அதற்கு போதிய பலன் கிடைக்கவில்லை. மாறாக.. 3வது விக்கெட்டாக மில்லர் வீழ்ந்தார்.

ரன்ரேட் குறைந்தது
13வது ஓவரில் கெயில் அவுட்டானதுமே நிலைமை தலைகீழானது. ரன்ரேட்டும் குறைந்து போனது. விக்கெட்டுகளும் விழத் தொடங்கின. 69 ரன்கள் எடுத்திருந்த அவர்.... கேட்சாகி வெளியேற, அதே ஓவரில் சாம் கர்ரனும் ஆட்டமிழந்தார்.

163 ரன்கள் எடுத்தது
அதன்பிறகு 5 ஓவர்களில் கிட்டத்தட்ட அணியின் ரன் விகிதம் குறைந்து போனது. இருப்பினும் கடைசி 3 ஓவர்களில் 29 ரன்கள் கிடைத்ததால், ஆட்டத்தின் முடிவில் 163 ரன்கள் என்ற கவுரவமான ஸ்கோரை பஞ்சாப் அணி எட்டியது.


Click it and Unblock the Notifications