Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

இன்னிக்கு என்னாகுமோ? ஜெய்பூரில் இந்த முறையாவது ஜெயிக்குமா பஞ்சாப்...?

Recommended Video

IPL 2019: Rajasthan vs Punjab | ஜெய்பூரில் இந்த முறையாவது ஜெயிக்குமா பஞ்சாப்?- வீடியோ

ஜெய்பூர்: ஐபிஎல் போட்டியில், ராஜஸ்தான் ராயல்ஸ் அணி, கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியை எதிர்கொள்கிறது. ஜெய்பூரில் நடந்த 5 போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றதே இல்லை.

பந்தை சேதப்படுத்திய புகாரால் விதிக்கப்பட்ட ஓராண்டு தடைக்கு பின்னர் ஆஸி. முன்னாள் கேப்டன் ஸ்டீவ் ஸ்மித் மீண்டும் ராஜஸ்தான் அணியில் இணைந்திருக்கிறார். இது அந்த அணிக்கு கூடுதல் பலம்.

வங்கதேச ப்ரீமியர் லீக் போட்டியில் பங்கேற்ற ஸ்மித் முழங்கையில் காயமடைந்ததால் விலகினார். உலக கோப்பைக்கான ஆஸி அணியில் இடம் பெற ஸ்மித்துக்கு ஐபிஎல் தற்போது ஒரு வாய்ப்பாக அமைந்துள்ளது.

பலம் வாய்ந்த பேட்டிங்

பலம் வாய்ந்த பேட்டிங்

அணியில் ரகானே, ஆல்ரவுண்டர் பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லருடன் ராஜஸ்தான் பேட்டிங் பலம் வாய்ந்த்தாக காணப்படுகிறது. அதே நேரத்தில் ஜெயதேவ் உனதிகட், வருண் ஆரோன், தவல் குல்கர்னி, ஜோஃப்ரா ஆர்ச்சர், ஐஷ் சோதி பந்துவீச்சில் கலக்குவார்கள் எனலாம்.

வெளுப்பாரா கெயில்?

இங்கிலாந்து வீரர்கள் பென் ஸ்டோக்ஸ், ஜோஸ் பட்லர் ஆகியோர் ஏப்ரல் 25ம் தேதிக்கு பின் ஐபிஎல் தொடரில் கலந்து கொள்ள மாட்டார்கள்.பஞ்சாப் அணியில் அதிரடி மன்னன் கிறிஸ் கெயில் இருக்கிறார்.

பந்துவீச்சு எப்படி?

பந்துவீச்சு எப்படி?

அவரோடு கேஎல்.ராகுல், சாம் கர்ரன், நிக்கோலஸ் பூரன், மயங்க் அகர்வால் ஆகியோர் பேட்டிங்கில் வெளுக்க காத்திருக்கின்றனர். அஸ்வின், ஷமி, வருண் சக்ரவர்த்தி, ஆன்ட்ரு டை, முஜிப்புர் ரஹ்மான் ஆகியோர் பந்துவீச்சிலும் வலு சேர்க்கின்றனர்.

7 முறை பஞ்சாப் வெற்றி

7 முறை பஞ்சாப் வெற்றி

ஐபிஎல் கிரிக்கெட் தொடரில் இரு அணிகளும் இதுவரை 17 முறை மோதியுள்ளது. அதில் ராஜஸ்தான் ராயல்ஸ் அணி அதிகபட்சமாக 10 முறை வென்றுள்ளது. கிங்ஸ் லெவன் அணி 7 முறை வென்றுள்ளது. இன்றைய போட்டி சொந்த மண்ணில் நடப்பது ராஜஸ்தான் அணிக்கு மிகப்பெரிய பலம்.

காத்திருக்கும் சவால்

காத்திருக்கும் சவால்

ஆனால் அதே நேரத்தில் பஞ்சாப் அணிக்கு ஒரு சவால் காத்திருக்கிறது. இதுவரை ஜெய்பூரில் நடந்த 5 போட்டியில் கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி வெற்றி பெற்றதே இல்லை. இன்று அது மாறுமா என்று எதிர்பார்க்கலாம்.

Story first published: Monday, March 25, 2019, 13:37 [IST]
Other articles published on Mar 25, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+