Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

KXIP vs CSK:டாஸ் வென்ற பஞ்சாப்.. பேட் செய்ய முதலில் களம் இறங்கியது சென்னை

Recommended Video

சென்னைக்கு எதிரான கடைசி லீக் போட்டி... பஞ்சாப் பந்துவீச முடிவு

சண்டிகர்: சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு எதிரான ஐபிஎல் லீக் போட்டியில், டாஸ் வென்ற கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணி கேப்டன் அஸ்வின் முதலில் பீல்டிங் தேர்வு செய்தார்.

இந்த ஆண்டு 56 லீக் போட்டிகள் கொண்ட ஐபிஎல் தொடரில் 54வது லீக் போட்டி சண்டிகரில் நடைபெறுகிறது. அதில் புள்ளிப்பட்டியலில் முதல் இடத்தில் இருக்கும் சென்னை அணியும் 8வது இடத்தில் இருக்கும் பஞ்சாப் அணியும் மோதுகின்றன. இந்த போட்டியில் முதலில் டாஸ் வென்ற பஞ்சாப் அணியின் கேப்டன் அஸ்வின் பந்து வீச்சினை தேர்வு செய்தார்.

Kings xi punjab won the toss and elected to field

சென்னை அணி ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றுவிட்டது. அதனால், இன்றைய போட்டியில் வென்றால் புள்ளிப்பட்டியலில் தொடர்ந்து முதல் இடம் மட்டுமே கிடைக்கும்.அதேபோல, பஞ்சாப் அணியும் ஏற்கனவே பிளே ஆப் சுற்றுக்கான வாய்ப்பை இழந்துவிட்டது.

அதனால், கடைசி போட்டியில் வெற்றியுடன் வெளியேறும் முனைப்புடன் ஆடும். பஞ்சாப் அணி ஒரு மாற்றத்துடன் மாற்றத்துடன் களமிறங்குகிறது. ஹர்ப்ரீத் ப்ரார் உள்ளே வருகிறார். சென்னை அணி வழக்கம்போல எவ்வித மாற்றமும் இன்றி, களமிறங்குகிறது.

கிங்ஸ் லெவென் பஞ்சாப் அணி வீரர்கள்:கிறிஸ் கெய்ல், கே.எல். ராகுல், மயங்க் அகர்வால், நிக்கோலஸ் பூரன், மந்திப் சிங், சாம் கர்ரன், அஸ்வின் (கேப்டன்), ஹர்பிரீத் ப்ரார் , முகமது சமி, முருகன் அஸ்வின், ஆண்ட்ரூ டை

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள்: ஷேன் வாட்சன், டு பிளெசிஸ், சுரேஷ் ரெய்னா, தோனி (கேப்டன் & கீப்பர்), ரவீந்திர ஜடேஜா, அம்பதி ராயுடு, கேதர் ஜாதவ், டுவேன் பிராவோ, தீபக் சஹார், ஹர்பஜன் சிங், இம்ரான் தாஹிர்.

Story first published: Sunday, May 5, 2019, 16:17 [IST]
Other articles published on May 5, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+