கேப்டனோ, கோச்சோ.. யாரா இருந்தாலும் "ஆக்ஷன்" உறுதி - KKR அதிரடி அறிவிப்பு
மும்பை: தவறு செய்ததது யாராக இருந்தாலும், பாரபட்சமின்றி நடவடிக்கை எடுக்கப்படும் என்று கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி நிர்வாகம் எச்சரித்துள்ளது. எதனால்?
இந்திய ரசிகர்களின் ஆங்கில அறிவை கேலி செய்யும் விதமாக இயன் மோர்கன், பிரண்டன் மெக்குல்லம்ம் ஜோஸ் பட்லர் ஆகியோர் பதிவிட்ட ட்வீட் சலசலப்பை ஏற்படுத்தியது.
நியூஸிலாந்தும் அணியின் முன்னாள் கேப்டனும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் பயிற்சியாளருமான பிரண்டன் மெக்குல்லம், 2018ம் ஆண்டு மே மதம் பதிவிட்ட ட்வீட் ஒன்றில், இங்கிலாந்து வீரர் ஜோஸ் பட்லரை டேக் செய்து, "josbuttler Sir, you play very good Opening batting" என்று குறிப்பிட்டுள்ளார். அதாவது, சரியாக ஆங்கிலம் தெரியாத சில இந்திய ரசிகர்கள் போன்று ஆங்கிலத்தில் மெக்குல்லம் ட்வீட் செய்திருந்தார்.

ரசிகர்களின் ஆங்கில புலமை
அதே டீவீட்டுக்கு பதில் அளித்துள்ள, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கேப்டனும், இங்கிலாந்து லிமிட்டட் ஓவர்ஸ் கிரிக்கெட் அணியின் கேப்டன் இயன் மோர்கன், "Sir you're my favourite batsman" என்று சில இந்திய ரசிகர்களின் ஆங்கில அறிவை கிண்டல் செய்யும் விதமாக ட்வீட் செய்துள்ளார். அதேபோல், ஜோஸ் பட்லர் தனது டீவீட்டில், "Well done on double 100 much beauty batting your on fire sir." He further tweeted, "I always reply sir no.1 else like me like u" என்று இந்திய ரசிகர்களின் ஆங்கிலத்தை கிண்டல் செய்து ட்வீட் செய்ய, அனைத்தும் இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.

மீண்டும் சர்ச்சை
குறிப்பாக, நியூசிலாந்துக்கு எதிரான டெஸ்ட் போட்டியில் அறிமுக பவுலராக களமிறங்கி அசத்திய ஓலே ராபின்சன், இனவெறி மற்றும் பாலியல் தொடர்பான டிவீட்களை 8 வருடங்களுக்கு பதிவிட்டது இப்போது சர்ச்சை ஆனதால், அனைத்து விதமான சர்வதேச கிரிக்கெட் போட்டிகளிலும் விளையாட தற்காலிகமாக அவருக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், இம்மூன்று சர்வதேச வீரர்களின் டீவீட்டும் இப்போது சர்ச்சையில் சிக்கியுள்ளது.

சகித்துக் கொள்ளாது
இதுகுறித்து கருத்து தெரிவித்துள்ள கொல்கத்தா அணியின் தலைமை செயல் அதிகாரி வெங்கி மைசூர், "இந்த நேரத்தில் இது கருத்து தெரிவிக்கும் அளவுக்கு, இவ்விவகாரம் குறித்து முழுவதும் நாங்கள் அறியவில்லை. எந்தவொரு முடிவை எடுப்பதற்கு முன்னும், அது பற்றிய அனைத்து உண்மைகளையும் அறியும் வரை காத்திருப்போம். எனினும், நைட் ரைடர்ஸ் அமைப்பு இதுபோன்ற எந்தவொரு சம்பவத்தையும் என்றும் ஏற்காது. என்றும் சகித்துக் கொள்ளாது" என்று எச்சரித்துள்ளார்.

தொடரும் நடவடிக்கை
ஓலே ராபின்சன் தொடங்கி, மெக்குல்லம், பட்லர், மோர்கன், ஜேம்ஸ் ஆண்டர்சன் என்று அடுத்தடுத்து பல இங்கிலாந்து கிரிக்கெட் வீரர்கள் தங்களது கடந்த கால டிவீட்களால் சர்ச்சையில் சிக்கியுள்ளனர். ஜேம்ஸ் ஆண்டர்சன் 'லெஸ்பியன்ஸ்' குறித்து ட்வீட் செய்து சர்ச்சையில் சிக்கியுள்ளார். அவர் மீதும் விரைவில் இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் விசாரணையை தொடங்கி நடவடிக்கை எடுக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications