For Quick Alerts
ALLOW NOTIFICATIONS  
For Daily Alerts
 

IPL 2025: முதல் மேட்ச்சுக்கு ஆப்பு.. இப்படியா நடக்கணும்? பிசிசிஐக்கு தலைவலி.. ஏமாற்றத்தில் ரசிகர்கள்

கொல்கத்தா: 2025 ஐபிஎல் தொடரின் முதல் போட்டி திட்டமிட்டபடி நடைபெறுமா? என்ற கேள்வி எழுந்துள்ளது. 2025 ஐபிஎல் தொடரின் முதல் போட்டி மார்ச் 22 அன்று கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற உள்ளது.

கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் இந்த போட்டியில் மோத உள்ளன. இந்த போட்டி நடைபெற உள்ள கொல்கத்தா நகரத்தில் கடந்த சில நாட்களாகவே மழை பெய்து வருகிறது. போட்டிக்கு முந்தைய நாளான இன்றும் இரு அணிகளும் பயிற்சி செய்ய முடியாத அளவுக்கு மழை பெய்தது. மேலும், மார்ச் 20 முதல் 22 வரை மேற்கு வங்காளத்தின் சில பகுதிகளுக்கு "ஆரஞ்சு அலர்ட்" விடுக்கப்பட்டுள்ளது.

KKR and RCB Rain Threatens IPL 2025 Opening Match Between in Kolkata

இந்த நிலையில் போட்டி நாளான மார்ச் 22 அன்றும் மழை பெய்யும் என வானிலை அறிக்கையில் சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. அக்யுவெதர் (AccuWeather) என்ற இணையதளத்தில் கொல்கத்தா நகரத்தில் மார்ச் 22 அன்று காலை நேரத்தில் மழை பெய்யும் எனக் கூறப்பட்டுள்ளது.

போட்டி துவங்கும் நேரம் ஆன இரவு 7.30 மணிக்கு 45 சதவீதம் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது எனவும், போட்டியின் இரண்டாவது இன்னிங்ஸின் போது 65 சதவீதம் மழை பெய்வதற்கான வாய்ப்பு உள்ளது எனவும் குறிப்பிடப்பட்டு இருக்கிறது.

இந்த முதல் போட்டிக்கு முன்பு பிரம்மாண்டமான துவக்க விழாவுக்கு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பாலிவுட் பிரபலங்கள் பலரும் அதில் கலந்து கொள்ள உள்ளனர். அந்த விழாவும் திட்டமிட்டபடி நடைபெறாது என தற்போது கூறப்படுகிறது. மழையின் காரணமாக 2025 ஐபிஎல் தொடரின் துவக்க விழா மற்றும் முதல் போட்டி பாதிப்படைய அதிக வாய்ப்பு ஏற்பட்டு உள்ளது.

இது தொடரை நடத்தும் பிசிசிஐக்கு அழுத்தத்தை ஏற்படுத்தி உள்ளது. மறுபுறம் ஐபிஎல் திருவிழாவுக்காக காத்திருக்கும் பல ரசிகர்களுக்கும் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. எனினும், போட்டி நாளன்று வானிலையில் ஏதேனும் மாற்றம் ஏற்படும் வாய்ப்பும் உள்ளது.

போட்டி முற்றிலுமாக கைவிடப்படாது எனவும், சில ஓவர்களாவது வீசப்படும் எனவும் ஈடன் கார்டன் மைதான நிர்வாகிகள் நம்பிக்கை தெரிவித்துள்ளனர். வானிலை எப்படி இருக்கும் என்பது குறித்து போட்டி துவங்குவதற்கு சில மணி நேரம் முன்புதான் ஓரளவு கணிக்க முடியும்.

செய்தி சுருக்கம்:

  • 2025 ஐபிஎல் தொடக்க ஆட்டம் கொல்கத்தாவில் மார்ச் 22 அன்று நடைபெற உள்ளது.
  • கொல்கத்தாவில் பெய்து வரும் மழையால் போட்டி பாதிக்கப்படலாம் என்ற அச்சம் நிலவுகிறது.
  • வானிலை அறிக்கையின்படி போட்டி நேரத்தில் மழை பெய்ய 45% வாய்ப்புள்ளது.
  • தொடக்க விழா திட்டமிட்டபடி நடைபெறுமா என்ற கேள்வியும் எழுந்துள்ளது.
  • மைதான நிர்வாகிகள் போட்டி முழுவதுமாக கைவிடப்படாது என்ற நம்பிக்கையை தெரிவித்துள்ளனர்.
Story first published: Friday, March 21, 2025, 19:54 [IST]
Other articles published on Mar 21, 2025
English summary
KKR and RCB: Rain Threatens IPL 2025 Opening Match Between in Kolkata
Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+