Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

கங்குலியின் விஸ்வரூப விளாசல் – கொல்கத்தா நைட் ரைடர்ஸ் வெற்றி

கொல்கத்தா: கேப்டன் சவுரவ் கங்குலியின் அபராமான பேட்டிங், மற்றும் கொல்கத்தா அணியின் சிறப்பான பேட்டிங் காரணமாக, டெக்கான் சார்ஜர்ஸ் அணி 24 ரன்கள் வித்தியாசத்தில், கொல்கத்தாவிடம் தோல்வியைச் சந்தித்த்து.

கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நேற்று இந்த முக்கியப் போட்ட நடந்த்து. இதில் கொல்கத்தாவும், ஹைதராபாத் டெக்கான் சார்ஜர்ஸும் மோதின. ஏற்கனவே நடந்த முதல் லீக் போட்டியில் கொல்கத்தாவிடம் தோல்வியைச் சந்தித்திருந்ததால் இப்போட்டியில் பழி தீர்த்து விட காத்திருந்த்து ஹைதராபாத்.

ஆனால் நேற்று மிக மோசமான தோல்வியை அது சந்தித்த்து. முதலில் ஆடிய கொல்கத்தா அணியில் கேப்டன் கங்குலி அபாரமான ஆட்டத்தை வெளிப்படுத்தினார்.

சிறந்த பேட்டிங் பார்மை வெளிப்படுத்திய கங்குலி 88 ரன்களைக் குவித்தார். இதற்கு அவர் எடுத்துக் கொண்ட பந்துகள் 54 மட்டுமே. கங்குலி மற்றும் ஹஸ்ஸியின் சிறப்பான ஆட்டம் காரணமாக கொல்கத்தா அணி 20 ஓவர்களில் 6 விக்கெட் இழப்புக்கு 181 ரன்களைக் குவித்த்து. இந்த ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணியின் அதிகபட்ச ஸ்கோர் இதுதான்.

தொடக்க ஆட்டக்கார்ர் கெய்ல் விரைவாக வீழ்ந்தாலும் கூட கங்குலி நிலைத்து நின்று ஆடி அணியை ஸ்திரப்படுத்தி விட்டார். அவரும் ஹஸ்ஸியும் இணைந்து 78 ரன்களைச் சேர்த்தனர்.

ஒரு கட்டத்தில் 3 விக்கெட் இழப்புக்கு 68 என்ற மோசமான நிலையில் இருந்த்து கொல்கத்தா. ஆனால் கங்குலி, ஹஸ்ஸியின்ஆட்டத்தால் அணியின் ஸ்கோர் கிடுகிடுவென உயர்ந்த்து.

பின்னர் ஆடிய டெக்கான் சார்ஜர்ஸ் அணிக்கு தொடக்கத்திலிருந்தே சரிவுதான். கேப்டன் கில்கிறைஸ்ட் 9 ரன்களில் ஆட்டமிழந்தார். கிப்ஸ் நிலைத்து ஆடி 50 ரன்களைக் குவித்தார். சைமண்ட்ஸின் பங்கு 45 ரன்களாகும். ஆனால் இது அணியை வெற்றிக்கு இட்டுச் செல்லத் தவறி விட்டது. இருதியில், 5 விக்கெட் இழப்புக்கு 157 ரன்களை மட்டுமே எடுக்க முடிந்த்து ஹைதராபாத்தால்.

ஆட்ட நாயகனாக கங்குலி தேர்ந்தடுக்கப்பட்டார். இந்த வெற்றியின் மூலம் கொல்கத்தா அணியின் அரை இறுதிக்கான கனவுகள் இன்னும் உயிர்ப்புடன் உள்ளன.

சுருக்கமான ஸ்கோர்

கொல்கத்தா - 181-6 (கங்குலி -88, டேவிட் ஹஸ்ஸி -31, சைமண்ட்ஸ் 2/26, பிரக்யான் ஓஜா 2/38, ஜஸ்கரன் சிங் 2/18.

டெக்கான் சார்ஜர்ஸ் - 157-5. (கிப்ஸ் 50, சைமண்ட்ஸ் 45, மாத்யூஸ் 1/25)

Story first published: Wednesday, December 7, 2011, 18:36 [IST]
Other articles published on Dec 7, 2011
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+