Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

KKR அணிக்கு 52 கோடி ரூபாய் போச்சா? டி20 உலககோப்பையில் சொதப்பிய ஸ்டார் வீரர்.. 3 பேர் காயம்

மும்பை: ஐபிஎல் 2026 தொடருக்கு முன்னதாக, கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி பல முக்கிய சவால்களை எதிர்கொள்வதாக முன்னாள் இந்திய வீரர் ஆகாஷ் சோப்ரா தெரிவித்துள்ளார். ₹25.20 கோடிக்கு வாங்கப்பட்ட கேமரூன் கிரீன் பேட்டிங்கில் சோபிக்காததும், வேகப்பந்துவீச்சளர்கள் சிலர் இல்லாதது பிரச்சினையை ஏற்படுத்தும் என்றும் அவர் கூறினார்.

கிரீன், நடப்பு டி20 உலகக் கோப்பை 2026 தொடரில் மூன்று இன்னிங்ஸ்களில் வெறும் 24 ரன்கள் (மட்டுமே எடுத்துள்ளார். இது குறித்து பேசிய ஆகாண் சோப்ரா, "நீங்கள் ₹25 கோடி கொடுத்த ஒரு வீரரின் பேட்டிலிருந்து ஒரு ரன் கூட வரவில்லை. கேமரூன் கிரீன் சுத்தமாக சோபிக்கவில்லை. அவர் ஒரு செயலற்ற சொத்தாக மாறினால், கொல்கத்தாவின் நிலை என்னவாகும்?" என்று கவலை தெரிவித்தார்.

3 முறை ஐபிஎல் சாம்பியன்களான கேகேஆர், வேகப்பந்துவீச்சுப் பிரிவில் கடும் நெருக்கடிகளைச் சந்திக்கிறது. ஹர்ஷித் ராணா, முஸ்தாபிசுர் ரஹ்மான் இல்லாதது மற்றும் மதீஷா பதிரனாவின் காயம் ஆகியவை பலவீனங்களை ஏற்படுத்தும். ஆஸ்திரேலியாவுக்கு எதிரான போட்டியில் பதிரனாவுக்கு காயம் ஏற்பட்டதால், அவர் பாதியில் விலகினார்.

இது குறித்து பேசிய குறித்து ஆகாஷ் சோப்ரா, "பதிரனா தனது காலை வலியால் தொட்டதும், ஈடன் கார்டனில் இருந்து 'ஓ' என்ற சத்தம் கேட்டது. ஹர்ஷித் ராணா ஐபிஎல்-க்கு வரமாட்டார், முஸ்தாபிசுர் ரஹ்மானும் வரமாட்டார், பதிரனாவும் வரவில்லை என்றால், யார் பந்து வீசுவார்கள்?" என்று கேள்வி எழுப்பினார்.அவர்

கேகேஆர் அணியின் இந்திய வேகப்பந்துவீச்சுப் பிரிவில் வைபவ் அரோரா, ஆகாஷ் தீப், உம்ரான் மாலிக், கார்த்திக் தியாகி போன்ற வீரர்கள் இருப்பினும், அது போதுமானதா என சோப்ரா கேள்வி எழுப்பினார். "அணிக்கு ஒப்பந்தம் செய்யக்கூடிய வெளிநாட்டு வேகப்பந்துவீச்சாளர்களின் பட்டியல் என்னிடம் உள்ளது: ஸ்பென்சர் ஜான்சன், ரிச்சர்ட் கிளீசன், ஜே ரிச்சர்ட்சன், ஷான் அபோட், நாதன் ஸ்மித், ஒருவேளை கஸ் அட்கின்சன் அல்லது ஜெரால்ட் கோட்ஸிட்ஸ் ஆகியோர் தான் மாற்று வீரர்களாக உள்ளனர். பதிரனா மற்றும் முஸ்தபிசுர் தரத்தில் இவர்களில் யாரும் இல்லை," என சோப்ரா குறிப்பிட்டார்.

"இதுதான் அவர்களது தற்போதைய நிலை. மிகச் சிறந்த பந்துவீச்சாளர்களுக்கான வாய்ப்புகள் அவர்களிடம் இல்லை. இந்திய பந்துவீச்சில் , ஆகாஷ் மாத்வால், கமலேஷ் நாகர்கோட்டி, ராஜ் லிம்பானி அல்லது மணி க்ருவால் போன்றவர்கள் இருக்கலாம், ஆனால் அவ்வளவுதான். தரமானவர்கள் யாரும் கிடைக்கவில்லை," என்று சோப்ரா கூறினார்.

மதீஷா பதிரனா மற்றும் முஸ்தாபிசுர் ரஹ்மான் இருவரின் மொத்தத் தொகையான ₹27.20 கோடி கேகேஆர் வசம் இருக்கலாம். ஆனால், தரமான வீரர்களை வாங்க ஆள் இல்லை என்று ஆகாஷ் சோப்ரா குறிப்பிட்டார். ஐபிஎல் 2026 தொடருக்கு முன்னதாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் குறித்து தான் சற்று கவலைப்படுவதாகவும் அவர் கூறினார்.

Story first published: Wednesday, February 18, 2026, 16:24 [IST]
Other articles published on Feb 18, 2026
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+