மொஹாலி: இன்று நடைபெறும் ஐபிஎல் போட்டியில், கிங்ஸ் லெவன் பஞ்சாப் அணியும், கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியும் மோதவுள்ளன.
இன்றைய ஐபிஎல் போட்டியில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியை தனது சொந்த மைதானமான மொஹாலியில் சந்திக்கிறது கிங்ஸ் லெவன் பஞ்சாப்.
தொடர்ந்து 3 போட்டிகளில் தோற்ற நிலையில் கொல்கத்தா அணியும், தடுமாற்றமான நிலையில் ஆட்டம் கண்டிருக்கும் பின்னணியில் பஞ்சாபும் இன்றைய போட்டியில் சந்திக்கின்றன.
டெக்கான் சார்ஜர்ஸ் மற்றும் ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூர் அணிக்கு எதிரான தொடக்க ஆட்டத்தில் அட்டகாசமாக ஜெயித்த அணி கொல்கத்தா. ஆனால் அடுத்த 3 போட்டிகளிலும் அது தோல்வியைச் சந்தித்துள்ளது.
கொல்கத்தா அணியின் பந்து வீச்சாளர்கள் சிறப்பாக செயல்பட்டு வருகிற நிலையில் பேட்டிங் மோசமாக உள்ளது. அதை சரி செய்தால் பஞ்சாபை சமாளிக்க முடியும்.
அதேசமயம், மோதிய ஐந்து போட்டிகளில் ஒரு வெற்றியை மட்டுமே பெற்று மோசமான நிலையில் காணப்படுகிறது பஞ்சாப். அந்த ஒரு வெற்றியும் கூட ஜஸ்ட் லக் என்றுதான் கூற வேண்டும். காரணம், சென்னைக்கு எதிரான அந்தப் போட்டியில், சூப்பர் ஓவரில்தான் பஞ்சாப் அந்த வெற்றியைப் பெற்றது. அதுவும் ஒரு ரன் வித்தியாசத்தில்தான் வெற்றி கிடைத்தது. எனவே இது
பெருமைப்படும்படியான வெற்றி என்று கூற முடியாது.
தற்போதைய நிலையில் கொல்கத்தாவின் கை ஓங்கியுள்ளபோதிலும், பஞ்சாப் வீறு கொண்டு எழுந்தால் அதை தகர்க்க முடியும்.