ரஸ்ஸல் இடத்தை நிரப்புவாரா கேமரூன் கிரீன்? கோடிகளை ஏற்றிவிட்டு பிரஷரைப் போட்டுட்டாங்களோ?
அபுதாபி: ஐபிஎல் 2026 மினி ஏலம் இன்று அதாவது டிசம்பர் 16ஆம் தேதி அபுதாபியில் நடைபெற்று வருகிறது. மொத்தம் 369 வீரர்கள் இந்த ஏலத்தில் ஏலமிட படுகிறார்கள். 10 அணிகளும் வீரர்களை போட்டி போட்டு எடுத்து வருகிறார்கள். இதில் முதல் சுற்றில் ஏலம் எடுக்கப்பட்ட வீரரான கேமரூன் கிரீன், ஐபிஎல் வரலாற்றிலேயே அதிகவிலைக்கு அதாவது ரூபாய் 25.20 கோடிகளுக்கு ஏலம் எடுக்கப்பட்டார். இதற்கு முன்னர் 2024ஆம் ஆண்டு ஆஸ்திரேலியாவின் வேகப்பந்து வீச்சாளர் மிட்ஷெல் ஸ்டார்க்கை ரூபாய் 24.75 கோடிகளுக்கு ஏலம் எடுத்திருந்தது. இந்நிலையில் அதிக விலைக்கு ஏலம் போன வீரர் என்ற சாதனையை கேமரூன் கிரீன் படைத்துள்ளார்.
கேமரூன் கிரீனை இவ்வளவு விலை கொடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி வாங்குவதற்கு மிகவும் முக்கியமான காரணங்களில், ஒன்று கொல்கத்தாவின் நம்பிக்கைக்குரிய வீரர், திறமையான மிடில் ஆர்டர் பேட்ஸ்மேன், திறமையான பந்துவீச்சாளர் என அட்டகாசமான ஆல்ரவுண்டர். கடந்த 2012 ஆம் ஆண்டில் இருந்து ஐபிஎல் போட்டிகளில் விளையாடிய ஆண்ட்ரே ரஸ்ஸல் 2025 ஆம் ஆண்டு ஐபிஎல் தான் அவரது கடைசி ஐபிஎல். தொடக்கத்தில் முதல் இரண்டு ஆண்டுகள் டெல்லி அணிக்காக விளையாடிய அவர் அதன் பின்னர், 2014ஆம் ஆண்டில் இருந்து கொல்கத்தா அணிக்காக விளையாடினார்.

ரஸ்ஸல்: 140 போட்டிகளில் விளையாடி, மொத்தம் 2,651 ரன்கள் குவித்துள்ளார். இதில் 223 சிக்சர்களும் 186 பவுண்டரிகளும் அடங்கும். இது மட்டும் இல்லாமல் 123 விக்கெட்டுகளும் வீழ்த்தி உள்ளார். இப்படி இருக்கும்போது அவரது இடத்தை நிருப்புவதற்காகத்தான் கேமரூன் கிரீனை இவ்வளவு பெரிய தொகை கொடுத்து வாங்கி உள்ளது கொல்கத்தா அணி.
அழுத்தம் இருக்குமோ?: இந்த காரணத்திற்காகவும் அதிகப்படியான விலையுமே கேமரூன் கிரீனுக்கு பதற்றத்தை தேவையில்லாமல் உருவாக்கிவிடும் என்று பலரும் கருத்து தெரிவித்து வருகிறார்கள். கடந்த 2024 ஆம் ஆண்டு ஐபிஎல் தொடரில் கொல்கத்தா அணி ஸ்டார்க்கை 24.75 கோடிகளுக்கு ஏலத்தில் எடுத்தது. ஆனால் அந்த சீசன் முழுவதும் அவர் சிறப்பாக பந்து வீசவில்லை. ஆனால் இறுதிப் போட்டி நெருங்க நெருங்க மிரட்டி விட்டார் என்பதும் குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications