Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

புல்லட் தொடக்கம்.. புஸ்ஸான ஃபினிஷிங்.. ரஸல் இல்லாத குறையை அனுபவித்த கேகேஆர் - பஞ்சாப் ஹேப்பி

துபாய்: கொல்கத்தா அணிக்கு எதிரான போட்டியில், தமிழக வீரர் ஷாருக் கானின் மோசமான ஃபீல்டிங் காரணமாக, கேப்டன் ராகுல் கோபப்பட்டு அவரை அங்கேயே கண்டித்துள்ளார்.

ஐபிஎல் 2021 தொடரில், இன்று (அக்.1) நடைபெறும் ஆட்டத்தில் பஞ்சாப் மற்றும் கொல்கத்தா அணிகள் விளையாடி வருகின்றன.

இதில், டாஸ் வென்ற பஞ்சாப் கேப்டன் லோகேஷ் ராகுல் பவுலிங்கை தேர்வு செய்தார். முதலில் பேட்டிங் செய்த கொல்கத்தா 165 ரன்கள் எடுத்துள்ளது.

 பஞ்சாப் லெவன்

பஞ்சாப் லெவன்

கொல்கத்தா அணியின் பிளேயிங் லெவனில், ஷுப்மன் கில், வெங்கடேஷ் ஐயர், ராகுல் திரிபாதி, இயன் மோர்கன் (c), நிதிஷ் ராணா, தினேஷ் கார்த்திக் (w), டிம் சீஃபர்ட், சுனில் நரைன், சிவம் மாவி, டிம் சவுதி, வருண் சக்கரவர்த்தி ஆகியோர் இடம்பெற்றனர். அதேபோல், பஞ்சாப் அணியில், KL ராகுல் (w/c), மயங்க் அகர்வால், எய்டன் மார்க்ரம், நிக்கோலஸ் பூரன், ஷாருக் கான், தீபக் ஹூடா, ஃபேபியன் ஆலன், நாதன் எல்லிஸ், முகமது ஷமி, ரவி பிஷ்னோய், அர்ஷ்தீப் சிங் ஆகியோர் இடம்பெற்றனர்.

 போல்டான கில்

போல்டான கில்

இதில், ஷுப்மன் கில் சிறப்பாக ஆட்டத்தை தொடங்கினாலும், முடியவில்லை. 7 ரன்களில் அர்ஷ்தீப் பந்தில் ஸ்டெம்ப்புகள் தெறிக்க போல்டானார். பிறகு வெங்கடேஷ் ஐயருடன் திரிபாதி ஜோடி சேர்ந்தார். இருவரும் மிக மிக நேர்த்தியாக அருமையான பார்ட்னர்ஷிப்பை கட்டமைத்தனர். சிறப்பாக விளையாடி அரைசதம் அடித்த வெங்கடேஷ் ஐயர், 49 பந்துகளில் 67 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். இதில், 9 பவுண்டரிகளும் 1 சிக்ஸரும் அடங்கும். ராகுல் திரிபாதி 26 பந்துகளில் 34 ரன்கள் எடுத்து கேட்ச்சானார்.

 166 ரன்கள் இலக்கு

166 ரன்கள் இலக்கு

கேப்டன் இயன் மோர்கன் வழக்கம் ஸ்டேடியத்திற்குள் வந்து சுற்றிப்பார்த்துவிட்டு, ஷமி ஓவரில் 2 ரன்களில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். இறுதிக் கட்டத்தில், பெரிய ஹிட்டர்கள் இல்லாததால், கொல்கத்தா அணியால் ரன்கள் பெரிதாக குவிக்க முடியவில்லை. தினேஷ் கார்த்திக் 11 ரன்களில் போல்டானார். இதனால், கொல்கத்தா 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்பிற்கு 165 ரன்கள் மட்டுமே எடுத்தது. பஞ்சாப் சார்பில் அர்ஷ்தீப் சிங், 4 ஓவர்கள் வீசி 32 ரன்கள் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். ரவி பிஷ்னாய் 2 விக்கெட்டுகள் வீழ்த்தினார்.

 வெற்றி யாருக்கு?

வெற்றி யாருக்கு?

பஞ்சாப் அணியை பொறுத்தவரை 11 போட்டிகளில் விளையாடி வெறும் 4 வெற்றிகள் மட்டும் பெற்று 8 புள்ளிகளுடன் புள்ளிப்பட்டியலில் ஆறாம் இடத்தில் உள்ளது. புள்ளிப்பட்டியலில் 4ம் இடத்தில் உள்ள கொல்கத்தா 11 போட்டிகளில் 5ல் வெற்றிப் பெற்றுள்ளது. 6ல் தோற்றுள்ளது. எனினும் +0.363 எனும் நல்ல ரன் ரேட்டை கொல்கத்தா வைத்துள்ளது. மூன்றாமிடம் இடத்தில் இருக்கும் பெங்களூரு அணிக்கு கூட இவ்வளவு வலிமையான ரன் ரேட் கிடையாது. பிளே ஆஃப் ரேஸில் நீடிக்க இரு அணிகளுக்கும் இது மிக முக்கியமான போட்டியாகும்.

Story first published: Friday, October 1, 2021, 22:04 [IST]
Other articles published on Oct 1, 2021
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+