Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

KKR அணியில் வருண் சக்கரவர்த்திக்கு போட்டியாக புதிய 'மிஸ்டரி ஸ்பின்னர்' - யார் இந்த சிவம் சுக்லா?

கொல்கத்தா: கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் புதிதாக ஒரு 'மிஸ்டரி ஸ்பின்னர்' சேர்க்கப்பட்டிருக்கிறார். அவரது பெயர் சிவம் சுக்லா. கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இருந்த வெஸ்ட் இண்டீஸ் வீரர் ரோவ்மன் பவல் விலகி இருக்கும் நிலையில், அவருக்குப் பதிலாக சிவம் சுக்லா அணியில் சேர்க்கப்பட்டு இருக்கிறார்.

வெஸ்ட் இண்டீஸ் டி20 அணியின் கேப்டனாக இருக்கும் ரோவ்மன் பவல், தனது நாட்டுக்காக இன்னும் சில தினங்களில் இங்கிலாந்து அணிக்கு எதிரான கிரிக்கெட் தொடரில் பங்கேற்க இருப்பதால் அவர் மீண்டும் ஐபிஎல் தொடரில் பங்கேற்க மறுத்துவிட்டார். இதை அடுத்து கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி தற்காலிகமாக சிவம் சுக்லா என்ற 'மிஸ்டரி ஸ்பின்னரை' அணியில் தேர்வு செய்து இருக்கிறது.

KKR Signs Mystery Spinner Shivam Shukla as Rovman Powell s Replacement for IPL 2025

இவர் மத்திய பிரதேசத்தைச் சேர்ந்த வீரர் ஆவார். அதிக உள்நாட்டுப் போட்டிகளில் விளையாடி அனுபவம் இல்லாதவர். மத்திய பிரதேச டி20 லீக் தொடரில் 10 விக்கெட்டுகளை வீழ்த்தி அந்தத் தொடரிலேயே அதிக விக்கெட் வீழ்த்தியவராக இருந்தார். மத்திய பிரதேச அணிக்காக 8 போட்டிகளில் விளையாடி 8 விக்கெட் வீழ்த்தி இருக்கிறார். இந்த இரண்டு தொடர்களிலும் அவர் ஓராண்டு மட்டுமே விளையாடி இருக்கிறார். இதைத் தவிர அவருக்கு பெரிய அனுபவம் ஏதுமில்லை.

எனினும், அவரது 'மிஸ்டரி ஸ்பின்னை' வைத்து கடைசி லீக் போட்டியில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை வீழ்த்தலாம் என கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணி திட்டமிட்டு இருக்கிறது. அந்த அணி ஏற்கனவே பிளே ஆஃப் வாய்ப்பு இழந்துவிட்டது. எனினும், சிவம் சுக்லாவை பரிசோதனை முயற்சியாக அணியில் தேர்வு செய்திருப்பதாகத் தெரிகிறது.

இவர் வருண் சக்கரவர்த்திக்குப் போட்டியாகத் தேர்வு செய்யப்பட்டிருக்கிறாரா என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஏனெனில், வருண் சக்கரவர்த்தியும் ஒரு 'மிஸ்டரி ஸ்பின்னர்' தான். அவர் கடந்த சில ஆண்டுகளாக கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்காகச் சிறப்பாகவே விளையாடி வருகிறார்.

இந்த ஆண்டும் 12 போட்டிகளில் 17 விக்கெட்டுகளை வீழ்த்தி இருக்கிறார். இந்த ஆண்டு ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்டுகளை வீழ்த்தியவர்களின் பட்டியலில் அவர் ஐந்தாவது இடத்தில் இருக்கிறார் வருண் சக்கரவர்த்தி. இந்த நிலையில், அவருக்குப் போட்டியாளராக சிவம் சுக்லா மாறுவாரா என்ற கேள்வி எழுந்துள்ளது.

எனினும், சிவம் சுக்லாவால் இந்த ஆண்டு கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணிக்கு மீதமுள்ள ஒரு போட்டியில் மட்டுமே விளையாட முடியும். அடுத்த ஆண்டு அவரைத் தக்கவைத்துக் கொள்ள முடியாது என்பது குறிப்பிடத்தக்கது.

Story first published: Sunday, May 18, 2025, 16:53 [IST]
Other articles published on May 18, 2025
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+