Notifications
Settings
Clear Notifications
Notifications
Use the toggle to switch on notifications
  • Block for 8 hours
  • Block for 12 hours
  • Block for 24 hours
  • Don't block

ம்ஹூம்... இன்னும் ஆரம்பிக்கவே இல்லை... கொல்கத்தா அணியில் இருந்து 2 வீரர்கள் விலகல்

கொல்கத்தா:ஐபிஎல் தொடரில், இளம் வீரர்களான கமலேஷ் நாகர்கோடி, ஷிவம் மவி ஆகிய இரு வேகப்பந்து வீச்சாளர்களும் காயம் காரணமாக விலகியுள்ளனர்.

ஐபிஎல் தொடரின் 12வது சீசன் வரும் 23ம் தேதி சென்னையில் தொடங்குகிறது. இன்னும் 9 நாட்கள் மட்டுமே இருப்பதால் ரசிகர்களிடம் ஐபிஎல் ஜுரம் இப்போதே பற்றிக் கொண்டது.

பந்துவீச்சாளர்கள் விலகல்

பந்துவீச்சாளர்கள் விலகல்

கடந்த சீசனில் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இளம் வேகப்பந்து வீச்சாளரான ஷிவம் மவி, கம்லேஷ் நகர்கோடி ஆகியோர் இடம்பிடித்திருந்தனர். இருவரும் தற்போது காயம் அடைந்துள்ளனர்.

சந்தீப் வாரியருக்கு வாய்ப்பு

சந்தீப் வாரியருக்கு வாய்ப்பு

அதனால் இந்த சீசனில் அவர்கள் இருவரும் கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியில் இடம்பெறவில்லை. அவருக்கு பதிலாக ரஞ்சி கோப்பையில் சிறப்பாக பந்து வீசிய கேரளாவின் சந்தீப் வாரியர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.

காயத்தால் விலகல்

காயத்தால் விலகல்

நாகர்கோடி, முதுகுப் பகுதியில் ஏற்பட்ட காயம் காரணமாக ராஜஸ்தான் அணிக்காக விளையாடவில்லை. தற்போது ஐபிஎல் போட்டியிலிருந்தும் அவர் விலகியுள்ளார்.

ஹர்திக் பாண்டியா

ஹர்திக் பாண்டியா

கொல்கத்தா அணியைச் சேர்ந்த ஷிவம் மவியும் காயம் காரணமாக ஐபிஎல் போட்டியிலிருந்து விலகியுள்ளார். இதனிடையே, ஆஸ்திரேலியா தொடருக்கான இந்திய அணியில் இடம் பெற்றிருந்த ஹர்திக் பாண்டியா, காயம் காரணமான அணியில் இருந்து விலகினார்.

முழு உடல்தகுதி

முழு உடல்தகுதி

தற்போது அவர் முழு உடற்தகுதி பெற்றுவிட்டார். இதனால் மும்பை இந்தியன்ஸ் அணிக்காக அவர் களம் இறங்குகிறார்.

Story first published: Friday, March 15, 2019, 16:16 [IST]
Other articles published on Mar 15, 2019
Gender
Select your Gender
  • Male
  • Female
  • Others
Age
Select your Age Range
  • Under 18
  • 18 to 25
  • 26 to 35
  • 36 to 45
  • 45 to 55
  • 55+